(Source: ECI/ABP News/ABP Majha)
Tobacco in Tirupati Laddu | ”திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட், சிக்ரெட்” மீண்டும் வெடித்த சர்ச்சை
உலகெங்கும் உள்ள பக்தர்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயண்படுத்தபட்டதாக எழுந்த சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், பக்தர் ஒருவர் வாங்கிய லட்டுவில் குட்கா கவரும், சிகரெட் துண்டுகளும் கண்டறியப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..
தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லகுடம் பஞ்சாயத்து பகுதியில் வசித்து வருகிறார் பத்மாவதி என்ற பெண்மனி. இவர் கடந்த 19ம் தேதி தனது உறவினர்களுடன் திருமலை சென்று தரிசனம் செய்து விட்டு லட்டு பிரசாதத்தை வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். தன் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கு லட்டு பிரசாதத்தை வழங்கலாம், என்று லட்டுவை எடுத்த போது, அதிர்ந்து போயுள்ளார் பத்மாவதி..
வழக்கமாக திருப்பதி லட்டுவை உடைத்தால், அதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் தான் வரும், ஆனால் பத்மாவதி உடைத்த லட்டுவில் குட்கா பாக்கெட்டும், சிக்ரெட் துண்டுகளும் இருந்துள்ளது, இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனிதமான பிரசாதமாக கருதப்படும் திருப்பதி லட்டு தயாரிக்கும் இடத்தில் குட்கா மற்றும் சிக்ரெட் பயண்பாடு நட்ந்திருந்தால் அதுவே தவறு, இந்நிலையில் லட்டுவிலேயே அது கலந்து வருகிறதால் என்றால் எப்படி? என்ன தான் நடக்கிறது திருப்பதியில் என்ற கேள்வியை பக்தர்கள் எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயண்படுத்தபடுகிறது, குறிப்பாக பீப்ஃ மற்றும் பன்றி இறைச்சியின் கொழுப்புகள் பயண்படுத்த படுவதாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது குட்கா மற்றும் சிக்ரெட் துண்டுகள் லட்டுவில் கண்டறியபட்ட விவகாரம் மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.
உண்மையிலேயே திருப்பதி லட்டு சுகாதாரமான முறையில் தான் தயாரிக்கபடுகிறதா என்ற கேள்வியையும் அது எழுப்பியுள்ளது..