Trichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் பதற்றம் ஏற்பட்டது. மாலை 5. 40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த நிலையில், 8.15 மணியளவில் தற்போது திருச்சியிலேயே பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு இன்று மாலை 5:40 மணிக்கு 144 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது திடீரென அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் டயர்கள் விமானம் வானில் பறக்க தொடங்கிய பிறகும் உள்ளிழுத்துக் கொள்ளாமல் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. அதனைக் கண்டறிந்த விமானிகள் மீண்டும் அந்த விமானத்தைத் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கேட்டனர்.
உடனடியாக அதற்கான அனுமதி கிடைத்த நிலையில் மீண்டும் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. ஆனால் அந்த விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதன் காரணமாக விமானத்தைத் தரை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதற்கான முயற்சியில் விமானிகள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக 18 ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் மாலை 5. 40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த விமானம் 8.15 மணியளவில் தற்போது திருச்சியிலேயே பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.