மேலும் அறிய

Fake Police Arrest: SP-ய கூப்பிடவா? பில்டப் கொடுத்து மாட்டிய டுபாக்கூர் POLICE

நாகையில் பல்வேறு இடங்களில் வடமாநில டிஐஜி என கூறி நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையில் உள்ள சிலரிடமும் பதவி உயர்வு வாங்கி தருவதாக கூறி பிலா விட்ட போலி டிஜிபி மகேந்திரவர்மாவின் வேஷம் அம்பலம். நாகை புதிய கடற்கரை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்கெட்டிற்கு கடந்த 24 ம் தேதி காரில் வந்த நபர் பொருட்கள் வாங்கினார்.

உடனே கேசியர் வாங்கிய பொருட்களுக்கு பில்லை கொடுத்து பணம் கேட்டார். அதற்கு அந்த நபர் பணம் தராமல் சென்றார். கடை ஊழியர் பொருட்களுக்கான பணத்தை கேட்ட போது காரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். உடனே கேசியர் விக்னேஷ்வரன் கார்டு இயந்திரத்துடன் காருக்கு அருகில் சென்றார். கார்டு இயந்திரத்தில் ஏடிஎம் கார்டு மூலமாக பணம் செலுத்திய காருக்குள் இருந்த நபர் தன்னை மகேந்திரவர்மா என்றும், குஜராத்தில் டிஐஜியாக இருப்பதாக கூறினார். நாகை எஸ்பியை நான் கூப்பிட்டால் உடனே வருவார். அப்படி இருக்கும் என்னிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டினார்.

இதில் சந்தேகமடைந்த விக்னேஷ்வரன் வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும் ரவி என்பவரிடம் காரில் வந்த நபர் ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கி கொண்டு டிஐஜி என கூறி மிரட்டி சென்றார். இது குறித்து ரவி வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த இரண்டு புகார்களை பெற்ற வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என உறுதி செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவர் நிற்பதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா ஜமீன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் என்பது தெரியவந்தது.

இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கவிதாவிடம் ஓட்டுனராக பணிபுரிந்தது தெரியவந்தது. மேலும் கவிதா பணி உயர்வு பெற்று நாகையில் இன்ஸ்பெக்டராக வந்தவுடன் நாகை வந்த மகேஷ் தனது பெயரை மகேந்திரவர்மா என்று மாற்றி கொண்டு வடமாநிலத்தில் டிஐஜியாக வேலை பார்த்து வருவதாகவும், இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கவிதாவின் கணவர் என கூறி கொண்டு காரில் டிப்டாப்ஆக உடை அணிந்து கொண்டு நாகையில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் காவல்துறையில் உள்ள சிலரிடமும் பதவி உயர்வு வாங்கி தருவதாக கூறி மகேந்திரவர்மா ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேந்திரவர்மாவை கைது செய்தனர். இது போல் வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வீடியோக்கள்

Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!
Medical Waste : டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget