மேலும் அறிய

Seeman Slams MK Stalin | ’’நீட் தேர்வு மோசடி.. கோதாவுல இறங்குங்க முதல்வரே’’ சீமான் வேண்டுகோள்

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்று வாக்குறுதியளித்த திமுக, நடந்து முடிந்த தேர்தலில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றுள்ளதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பலத்தைப் பயன்படுத்தி, நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முறைகேடுகளும், குளறுபடிகளும் நிறைந்த நீட் தேர்வு முறையினையே நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய அடுத்தடுத்த பதிவெண்கள் கொண்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றதாக வெளியான முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நீட் தேர்வு ரத்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை வேண்டுமென குறிப்பிட்டும் பாஜக அரசை விமர்சித்தும் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியா முழுமைக்கும் நடப்பாண்டிற்கான நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடிகள் நடைபெற்ற நிலையில், நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து அழிக்கும் கொடிய நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுத்தது. ஆனால், நீட் தேர்வினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்தியா முழுவதும் மாணவ-மாணவியர் பலர் தங்கள் இன்னுயிரை இழந்த பின்னும் நீட் தேர்வினை ரத்து செய்ய இந்திய ஒன்றிய அரசு மறுத்துவருவது கொடுங்கோன்மையாகும்.

சோதனை என்ற பெயரில் நீட் தேர்வெழுதும் மாணவ மாணவியரின் உள்ளாடைகளைக் கழட்டி, தேர்வெழுத முடியாத அளவிற்கு கடும் பதற்றத்திற்கு ஆளாக்கியது முதல், தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடுவது அம்பலமானதுவரை நீட் தேர்வு தகுதியுடைய மருத்துவ மாணவர்களை உருவாக்குமென்பது பச்சைப்பொய் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதன் உச்சமாக, நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததுடன், அதற்காக வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக அவசர அவசரமாக வெளியிட்டதும், தேர்வில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்களின் வரிசை எண்கள் அடுத்தடுத்து உள்ளதும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்த ஐயத்தை அதிகரிக்கவே செய்கிறது. தொடர்ச்சியாக நடைபெறும் இம்முறைகேடுகள் அனைத்தும் நீட் தேர்வு முறையே தேவையற்ற ஒன்று என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கடந்த ஆட்சிக்காலங்களில் மக்களாட்சி முறையினையே முற்று முழுதாக அழித்தொழிக்க முயன்ற அரசியல் பிழைகளாலும், மக்களை வாட்டி வதைத்த அதிகார கொடுமைகளாலும், தற்போது அறுதிப்பெரும்பான்மையைப் பெற முடியாமல் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு, இனியேனும் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும். அதன் தொடக்கமாக ஏழை மாணவச்செல்வங்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் முறைகேடுகள் நிறைந்த கொடும் நீட் தேர்வு முறையையே நிரந்தரமாக ரத்து செய்ய முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்று வாக்குறுதியளித்த திமுக, நடந்து முடிந்த தேர்தலில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றுள்ளதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பலத்தைப் பயன்படுத்தி, நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் வீடியோக்கள்

KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோ
KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோ
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
அரசியலில் கால்பதிக்க தயாராகும் விவசாயிகள் - காரணம் இதுதான் 
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோVinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
அரசியலில் கால்பதிக்க தயாராகும் விவசாயிகள் - காரணம் இதுதான் 
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
“நான் வன்னியராக பிறந்தது என் தவறா? என் சாதி உங்கள் கண்களை உறுத்துகிறதா?- அன்புமணி உருக்கம்..!
“நான் வன்னியராக பிறந்தது என் தவறா? என் சாதி உங்கள் கண்களை உறுத்துகிறதா?- அன்புமணி உருக்கம்..!
”முதல்வரை சுற்றி இருக்கும் அமைச்சர்களுக்கு சமூக நீதி பற்றி தெரியுமா..?” விளாசிய அன்புமணி..!
”முதல்வரை சுற்றி இருக்கும் அமைச்சர்களுக்கு சமூக நீதி பற்றி தெரியுமா..?” விளாசிய அன்புமணி..!
DD Neelakandan : 10 ஆண்டுகளில் நான்காவது அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து டிடி நீலகண்டன் உருக்கம்
10 ஆண்டுகளில் நான்காவது அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து டிடி நீலகண்டன் உருக்கம்
அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
Embed widget