டெல்டா விவசாயிகளின் கனவு நனவு! கல்லணையில் தண்ணீரைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு.

தஞ்சாவூா்: டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தது.
இதனால் வழக்கம் போல் கடந்த 12ம் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். 8 மதகுகள் வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. 92வது ஆண்டாக பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக 6 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றுமுன்தினம் மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி காவிரி அன்னையை வரவேற்றனர். இதற்கிடையில் தஞ்சையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து வைப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு. தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து காவிரி தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. தஞ்சைக்கு வருவதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் தண்ணீரை திறந்து விடுவதற்காக திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக வந்தார். பின்னர் கல்லணையில் உள்ள அரசு தங்கும் இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுத்தார்.
தண்ணீர் திறப்புக்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரியில் வினாடிக்கு 1500 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என். நேரு, கோவி. செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். சாகுபடி அனைத்தும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என ஆறுகளில் பூக்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் தஞ்சை பிரியங்கா பங்கஜம், அரியலூர்... பெரம்பலூர்… புதுக்கோட்டை கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விவசாயிகள் காவிரி நீரை பயன்படுத்தி நல்ல முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்று ஆற்றில் பூக்கள் தூவி வழிப்பட்டனர். கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்





















