EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assembly
சட்டபேரவைக்கு யார் அந்த சார் என்ற பேட்ஜ் வைத்த சட்டை அணிந்து அதிமுகவினர் வருகை தந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் ரவி மற்றும் எல் எல் ஏக்கள் என அனைவரும் சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுகவினர் சட்டையில் யார் அந்த சார் என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். சமீபத்தில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த வழக்கில் யார் அந்த சார் என்பது தற்போது வரை மர்மாமகவே உள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெர்வித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக யார் அந்த சார் என்ற முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதும், யார் அந்த சார் என கண்டன போஸ்டர்கள் ஒட்டியும் எதிர்க்கட்சியாக தங்களது பலமான இருப்பை காட்டியது. தூங்கிக்கொண்டிருந்த அதிமுக இதன்மூலம் ஆக்டிவ் பாலிடிக்ஸில் அதிரடியாக களமிறங்கியதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது
சட்டமன்றத்திற்கு அணிந்து வந்த சட்டையில் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து அதிரடி காட்டியுள்ளது.
அடுத்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என அதிமுக மும்முரம் காட்டி வருவதாகவும் இதற்காக மாஸ்டர்மைண்ட் ஒருவரின் ஆலோசனைகளை பின்பற்றி வருவதாகவும் பேசப்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் அதிரடி ஆட்டங்கள் அதனை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.