மேலும் அறிய

Palanivel Thiyagarajan : PTR தான் வேணும்..ஸ்டாலின் அதிரடி!மீண்டும் FINANCE மினிஸ்டர்?

 PTR தான் வேணும்..ஸ்டாலின் அதிரடி!மீண்டும் FINANCE மினிஸ்டர்? 

தமிழக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜணுக்கு மீண்டும் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக வெளியாகி உள்ள தகவலால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்..

தமிழக முதல்வராக 2021ல் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அமைச்சருக்கு இலாக்காக்கள் ஒதுக்கியதில் பலருக்கு பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்தாலும், அனைவருமே சரியான தேர்வு என்று கிரீன் டிக் அடித்தது நிதித்துறை அமைச்சகத்தை பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இடம் வழங்கியதை தான். காரணம் சர்வதேச அளவில் பெரும் நிறுவனங்களான லெஹ்மன் பிரதர்ஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் போன்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியாகவும், ஆலோசகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிகுந்தவர் பி டி ஆர். 

நிதித்துறையில் தமிழக கேபினேட்டில் இவருக்கு நிகரான அனுபவம் கொண்டவர் யாரும் இல்லை என்று சொல்லலாம். 

இந்நிலையில்தான் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பி டி ஆர் தமிழகத்தின் நிதிநிலையை சரிவிலிருந்து மீட்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது, அவரும் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை இருப்பதாக தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் இதை சரி செய்து தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவேன் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் நிதித்துறையில் இருந்து தான் தமிழகத்தின் மற்ற அனைத்து துறைகளுக்குமே பணம் செல்ல வேண்டும் என்ற நிலையில், செலவை கட்டுப்படுத்தும் வகையில் பிடிஆர் கராராக நடந்து கொள்வதாக சில அமைச்சர்கள் தலைமையிடம் புகார் அளித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இயங்கும் பி டி ஆர், ஈஷா விவகாரம் தொடங்கி பலரின் கருத்துக்களுக்கு எதிர்வணையாற்றுவது அது பின்னர் சர்ச்சையாக உருவெடுப்பது என்ற நிலை இருந்தது. 

இது போன்ற பல்வேறு புகார்கள் தலைமையின் காதுக்கு சென்றாலும் பி டி ஆர் தொடர்ந்து நிதித்துறை அமைச்சராக நீடித்து வந்தார். 

இப்படிப்பட்ட நிலையில் தான் கடந்த ஆண்டு பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது, அது முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் இரண்டே ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து விட்டனர் என்று கூறுவது போல் பேச்சுக்கள் இடம் பெற்று இருந்தது.

இந்நிலையில் அது தான் பேசியது இல்லை, அந்த ஆடியோ பொய்யானது என பி டி ஆர் விளக்கம் அளித்தார்.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே நிதித்துறை அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்ப துறை அவருக்கு வழங்கப்பட்டது. நிர்வாக ரீதியிலான மாற்றம் என்று திமுக தரப்பில் அவர்கள் சொன்னாலும், பி டி ஆர் இன் ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான அப்சட்டில் இருப்பதாகவே செய்திகள் வெளிவந்தன. 

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் நீதித்துறை பொறுப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்த பி டி ஆர், அதன் பிறகு தன்னுடைய பாணியை மாற்றிக் கொண்டு சர்ச்சைகளில் சிக்காமல் தனக்கு வழங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தை சிறப்பாக கவனித்து வந்தார்.

இந்நிலையில்தான் அண்மையில் சென்னையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதித்துறையில் இருந்து மாற்றினேன் தெரியுமா இன்று முதல் முறையாக வாய் திறந்தார். அதில் ஈ பி ஆர் பழனிவேல் தியாகராஜனின் புகழ்ந்து பேசிய ஸ்டாலின், நிதி அமைச்சர் ஆக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி டி ஆர். நிதித்துறை போன்று ஐடி துறையிலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதற்காகவே பி டி ஆர் ஐ மாற்றினேன் என்று தெரிவித்தார். 

இதன் மூலமாக ஸ்டாலினுக்கு பி டி ஆர் மீது இருந்த கோபம் நீங்கி விட்டது, மீண்டும் குட் புக்கில் பி டி ஆர் இடம் பிடித்து விட்டார் என்று சொல்லப்பட்டது. 

இந்நிலையில்தான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், திமுக அமைச்சரவையில் மாற்றத்தை செய்ய ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடைய இலாக்காவும் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மீண்டும் நிதி துறையை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. 

மேலும் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, இதுவரை பிரதிநிதித்துவம் கிடைக்கப்படாத சில சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. 

இந்த அறிவிப்பு அனைத்துமே ஜூன் 11ஆம் தேதி வெளியாகும் என்று திமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வரும் நிலையில், மீண்டும் நிதி துறை அமைச்சராக கம் பேக் கொடுப்பாரா பிடிஆர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Thirumavalavan :
Thirumavalavan : "விஜய் வந்தா நான் வரல” திருமா Condition.. ஆதவ் Shocked.. பின்னணியில் ஸ்டாலினா?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget