மேலும் அறிய

Congress Master Plan : இன்னும் 35 சீட் தான் பாஜகவின் அஸ்திவாரம் காலி காங்கிரஸின் ரகசிய ரிப்போர்ட்

35 இடங்களில் வென்றாள் போதும் பாஜகவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிடலாம் என்று காங்கிரஸ் நடத்திய இன்டர்னல் சர்வேயில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற ஒரு முறையில் தற்போது ஐந்து கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள இரண்டு கட்டங்களில் வெறும் 35 இடங்களில் வென்றால் கூட, பாஜக ஆட்சிக்கு வருவதை தடுத்து விடலாம் என்று காங்கிரசுக்கு ரிப்போர்ட் வந்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

தேர்தலை இரண்டு விதமாக பிரித்து காங்கிரஸ் கணக்கு போடுகிறது, அது தென்னிந்தியாவில் 50க்கும் அதிகமான இடங்களை வெல்ல வேண்டும், வட இந்தியாவில் 35 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும். அப்படி வென்றால் 85 இடங்கள் காங்கிரஸ் வசம் இருக்கும்...

கடந்த இரண்டு தேர்தல்களில் 2014 இல் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் 2019 52 இடங்களில் வென்றது. அதேநேரம் பாஜகவோ 2014ல் 282, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்தப் பெரும்பான்மை தான் பாஜகவை அசைக்க முடியாது சக்தியாகவும், தன்னை மிஞ்சி இங்கே யாரும் இல்லை என்ற தோற்றத்தை மோடிக்கு கொடுக்கிறது. 

ஆனால் இன்னொரு பக்கம் இந்த சூழல் காங்கிரஸிடம் இலக்க எதுவுமே இல்லை, அதே நேரம் பாஜகவிடம் இழப்பதற்கு அனைத்துமே இருக்கிறது என்ற நிலையை இந்த தேர்தலில் உருவாக்கியுள்ளது

அதாவது கடந்த தேர்தலில் வெறும் 52 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் இந்த முறை கூடுதலாக 35 இடங்கள் வென்றால், அது அனைத்துமே காங்கிரஸில் வெற்றியாகவும் பாஜகவின் தோல்வியாகவும் மாறும். 

இந்த இடத்தில் தான் 2004 தேர்தல் ஃபார்முலாவை நம்புகிறது காங்கிரஸ். 2004 தேர்தலில் பாஜக காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே ஏறக்குறைய ஒரே அளவிலான சீட்டை தான் வென்றிருந்தன. காங்கிரஸ் 145 இடங்களிலும் பாஜக 138 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், கூட்டணி கட்சிகள் அனைத்துமே காங்கிரஸ் உடன் சேரவே தயாராக இருந்தன. அதுவே யு பி ஏ அரசாங்கம் அமைய காரணமாக அமைந்தது. 

இந்த முறையும் அதே நிலையை உருவாக்கத்தான் காங்கிரஸ் முயன்று வருகிறது. ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும், வரலாற்று இல்லாத அளவுக்கு வெறும் 328 என்னும் குறைந்த அளவிலான இடங்களில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது. அப்படி இருக்கும்போது பெரும்பான்மையுடன் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. ஆனால் அதே நேரம் பாஜகவின் பெரும்பான்மையை உடைத்து, கூடுதல் இடங்களை காங்கிரஸ் கைப்பற்றினால், தேர்தல் களம் மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

மாநிலம் வாரியாக வீசும் ட்ரெண்டை பார்க்கும் போது, கடந்த 2019 தேர்தல் வெற்றியே பாஜகவின் பெஸ்ட் ரிசல்ட் ஆக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அப்படி இருக்கையில் 250 இடங்களில் பாஜக வெற்றி பெற்று, வெறும் நூறு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கூட பாஜகவா ஆட்சி அமைக்க முடியாமல் போகும் நிலை உருவாகலாம். 

அதனால் காங்கிரசைப் பொருத்தவரை ஹிமாச்சல் உத்தரகன் ஹரியானா ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் பீகார் சத்தீஸ்கர் ஜார்கண்ட் குஜராத் மகாராஷ்டிரா கோவா போன்ற இத்தனை மாநிலங்களிலும் போட்டியிட்டு வெறும் ஒன்பது இடங்களை மட்டுமே கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆள் கைப்பற்ற முடிந்தது. அதை எப்படியாவது அதிகரித்த இந்த பகுதிகளில் இன்னும் கூடுதலான தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. 

அப்படி அது நடந்து விட்டால் பாஜகவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்து விட முடியும் என்று காங்கிரஸ் நடத்தியுள்ள உட்கட்சி சர்வேவின் ரிப்போர்ட் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியல் வீடியோக்கள்

Trichy Surya |
Trichy Surya | "SV சேகரை ஏன் தூக்கல?" பற்ற வைக்கும் திருச்சி சூர்யா!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget