12 கிலோ எடை குறைப்பு சிம்புவை செதுக்கும் வெற்றிமாறன் தெறிக்கவிடும் INSTAGRAM POST | Arasan Simbu Poster
வெற்றிமாறன் இயக்க இருக்கும் அரசன் படத்திற்காக சிம்பு துபாய்க்கு சென்று 12 கிலோ எடை குறைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கூடிய விரைவில் அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
வடசென்னையை மையப்படுத்திய கதைக்களத்தை வைத்து அரசன் திரைப்படம் உருவாக இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் சென்னையில் லைவ் லொக்கேஷன்களில் படமாக்கப்பட இருக்கின்றன. அண்மையில் மாஸ்க் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்தார். அதன்படி முதற்கட்ட படப்பிடிப்பு காசிமேடில் துவங்க இருக்கிறது.
அரசன் படத்தின் ப்ரோமோவில் நெல்சன் ஒரு குட்டி கேமியோ செய்திருந்தார். ஆனாலும் படத்திலும் அவருக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. வடசென்னை படத்தில் நடித்த கிஷோர் , சமுத்திரகனி ஆகிய நடிகர்கள் இப்படத்திலும் நடிக்க இருக்கிறார்கள். நாயகியாக நடிக்க சமந்தாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
25 வயது மற்றும் 45 வயது என இரு தோற்றங்களில் சிம்பு இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இளம் தோற்றத்திற்காக சிம்புவிடம் வெற்றிமாறன் 12 கிலோ குறைக்க சொல்லியதாகவும், இதனால் துபாயில் கடுமையான உடற்பயிற்சி செய்து சிம்பு தனது உடல் எடையை குறைத்து தயாராகி வருகிறார். தனது புதிய லுக்கில் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு அப்லோட் செய்திருந்தார். நவம்பர் முதற்கட்ட படப்பிடிப்பிற்கு சிம்பு விரைவில் தமிழ்நாடு வரவிருக்கிறார்.
தனுஷ் நடித்த வடசென்னை கதையுலகத்திற்குள் நிகழும் கதையே அரசன்சொல்லப்படுகிறது. இரண்டும் கதைகளுக்கும் கால வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டையும் வெற்றிமாறன் இந்த படத்தில் எப்படி இணைக்கப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்





















