மேலும் அறிய

பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி கேட்குதா? - பொன்னேரி கூட்டத்தில் விளாசிய இபிஎஸ்!

திமுக கூட்டணி வலிமையானது இல்லை. ஆட்சியில் பங்கு கேட்க தொடங்கியிருக்கிறார்கள். இப்போது அந்த கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது என எடப்பாடி பழனிசாமி சரமாரியாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியானது சுயநலமிக்கது என பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வருவதற்கு இன்னும் 2 மாத காலம் தான் உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களாகிய நீங்கள் வாக்களித்து அமோக வெற்றியைத் தேடி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய கூட்டணி மிகவும் வலிமையானது. இந்த கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சியமைக்கும். இந்த கட்சியைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர் வேட்பாளர். இதுவே தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைப்பாடாக உள்ளது. 

திமுக கூட்டணியை விளாசிய இபிஎஸ்

திமுக கூட்டணி அப்படியில்லை. ஆட்சியில் பங்கு கேட்க தொடங்கியிருக்கிறார்கள். இப்போது அந்த கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் - திமுக இடையே விரிசல் ஏற்பட்டு விட்டது. அந்த கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாங்கள் எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம். எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்கிறார்கள். அதனால் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் வண்ணம் இடங்கள் வேண்டும் என கேட்கிறார்கள். தினம்தோறும் ஊடகத்தில் இதுதொடர்பான செய்தியைக் காணலாம். இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துள்ளார்.  ஆனால் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என தெரிவித்தார்.  ஆனால் எங்கள் தலைமையில் இருப்பது வலிமையான கூட்டணி, உண்மையான கூட்டணி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக இணைந்த கூட்டணியாகும். 

அதேசமயம் உங்கள் கூட்டணி சுயநலமிக்கது. அதனால் தான் முன்கூட்டியே காங்கிரஸ் கட்சி திமுக நிலைமை அறிந்து ஆட்சியில் பங்கு கேட்டு இப்பவே குரல் கொடுத்து வருகிறார்கள். விசிக பட்டும்படாமல் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கிறார்கள். இப்போது புதிதாக ஒரு கட்சி (தேமுதிக) அந்த கூட்டணியில் சேர்ந்துள்ளது. அந்த அம்மா (பிரேமலதா) ஒரு மாதம் முன்னால் கடலூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்கிறார். இப்படியிருக்கும் கட்சி எல்லாம் ஒன்று சேர்ந்து தான் திமுக கூட்டணி அமைத்திருக்கிறது. எனவே அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். மக்கள் விரோத திமுகவுக்கு இந்த தேர்தலோடு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும்" என அவர் உரையாற்றினார். 

தலைப்பு செய்திகள்

ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget