மேலும் அறிய

OPS meets MK Stalin | ஸ்டாலின் - OPS சந்திப்பு! திமுக கூட்டணியில் OPS? சட்டப்பேரவையில் சம்பவம்

தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ் அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

மக்களவை தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ். அதிமுகவுடன் பாஜக கைகோர்த்த பிறகு ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்த்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ஓபிஎஸ் விவகாரத்தில் ரெட் சிக்னலே கொடுத்தார். எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் நுழையில் ஓபிஎஸ்-ன் முயற்சி எடுபடவில்லை.

ஓபிஎஸ் உடன் இருந்த ஆதரவாளர்களும் அவரை தனித்து விட்டு திமுக, அதிமுக பக்கம் சென்றனர். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தது ஓபிஎஸ்-க்கு பேரிடியாக இருந்தது. அவர் வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்து வருகிறது. திமுக, தவெக தரப்பில் இருந்து ஓபிஎஸ் யிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக பேச்சு அடிபட்டது. அதேபோல் ஓபிஎஸ்-ஐ மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வரும் அசைன்மெண்ட்டை டிடிவி தினகரனிடம் பாஜக தலைமை ஒப்படைத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார் ஓபிஎஸ். சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். சட்டப்பேரவையில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு வரும் போது பேசுவதற்காக ஓபிஎஸ் காத்திருந்தார். பின்னர் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும் கூட்டணி கணக்குகளும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். எதிர்க்கட்சியினர் இன்றையை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், இத்தனை நாட்களாக வராத ஓபிஎஸ் இன்று present ஆகியுள்ளார். 

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக திடீரென திமுக கூட்டணியில் இணைந்து ட்விஸ்ட் கொடுத்தது. இந்தநிலையில் ஓபிஎஸ்-ம் ஸ்டாலினை சந்தித்துள்ளது கூட்டணி பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அடுத்த சில நாட்களில் கூட்டணி பற்றிய முக்கியமான முடிவை ஓபிஎஸ் எடுக்கவுள்ளதாக சொல்கின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget