மேலும் அறிய

Trump Tariff: தனக்கே ஆப்படிச்சுகிட்ட ட்ரம்ப் - வரியால் இந்தியா, சீனா ஹாப்பி - சிக்கிய இங்கிலாந்து, ஐரோப்பா ஷாக்

Trump Tariff: சுமையாக மாறும் என கருதப்பட்ட ட்ரம்பின் 15 சதவிகித வரி நடவடிக்கை, இந்தியா மற்றும் சீனாவிற்கு சாதகமாக மாறி இருப்பதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trump Tariff: ட்ரம்பின் புதிய 15 சதவிகித வரி நடவடிக்கை இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய பாதிப்பாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

ட்ரம்பின் 15% வரி நடவடிக்கை:

உலக நாடுகள் மீது சரிநிகர் வரி விதிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, ட்ரம்பின் 15 சதவிகித வரி அறிவிப்பானது உலக வர்த்தக சூழலை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிய அறிவிப்பால் இந்தியா மற்றும் சீனாவிற்கு மிகப்பெரிய சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் முன்னதாக, ஒவ்வொரு நாடுகளுக்கும் வணிக அளவு அடிப்படையில், வித்தியாசமான வரி விகிதங்களை அமெரிக்கா பின்பற்றியது. ஆனால், தற்போது அனைத்து நாடுகளும் ஒரே சீராக 15 சதவிகித வரி செலுத்த வேண்டுமென ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா, சீனாவிற்கான வெற்றி எப்படி?

அவசர கால சட்டத்தை பயன்படுத்தி உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த வரிகளானது செல்லாது என, அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பளித்தது. இதனால் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்தப்படும் வரி விகிதமானது குறைந்துள்ளது. இந்தியா மீது அமெரிக்க விதித்த 50 சதவிகித வரியானது பிப்ரவரி மாத தொடக்கத்தில் 25 சதவிகிதமாக குறைந்தது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை காரணமாக, அது 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால், இந்திய பொருட்களுக்கான வரியானது 15 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கான மிகப்பெரிய லாபமாக கருதப்படுகிறது. இதேபோன்று சீனா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட அமெரிக்காவின் 10 சதவிகித கூடுதல் வரியும் ரத்து செய்யப்பட்டு இருப்பதை, அந்நாடுகள் தங்களுக்கான லாபமாக பார்க்கின்றன.

அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய சந்தைகளான இந்தியா மற்றும் சீனா மீது, கூடுதல் வரியால் அதிக அழுத்தம் செலுத்த ட்ரம்ப் தீவிரம் காட்டினார். ஆனால், அந்த முடிவு தற்போது அவருக்கே மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. 

சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து..

உலக நாடுகள் மீதான ட்ரம்பின் வரி உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதன்மையானதாக உள்ளது. பல நாடுகளை காட்டிலும் குறைவாக அதாவது 10 சதவிகித வரி மட்டுமே, இங்கிலாந்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்தது.  ஆனால், தற்போது அது 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கான இங்கிலாந்து பொருட்களின் ஏற்றுமதிக்கான செலவு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதிகரிக்கக் கூடும் என்றும், இதனை குறைக்க வேண்டும் எனவும் இங்கிலாந்து அரசு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தீவிரம் காட்டி வருகிறது. முன்பு செலுத்தப்பட்டதை காட்டிலும் அதிக வரி செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இத்தாலி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. 

ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க ஐரோப்பிய யூனியன் பரிசீலனை:

ஐரோப்பிய யுனியன் உடன் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகளை, அமெரிக்கா மதிக்க வேண்டுமென ஐரோப்பிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வர்த்தகக் குழு தலைவர், ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து அதன் வர்த்தகக் கொள்கை குறித்து முழு விவரங்களைப் பெறும் வரை, அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒப்புதல் செயல்முறையை நிறுத்தி வைக்க பரிசீலிக்க திட்டமிட்டுள்ளாராம். அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றியம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
Cooking Gas Available : வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget