AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்! "நான் உங்கள HURT பண்ணல!” ரஹ்மான் திடீர் வீடியோ!
பிரிவினையை தூண்டும் விதமாக படம் எடுத்து பணம் சம்பாதித்திருக்கிறார்கள், பாலிவுட்டில் திறமை இல்லாதவர்களின் கையில் அதிகாரம் இருக்கிறது என ரஹ்மான் பேசியது சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட்டில் படைப்பாற்றல் இல்லதாவர்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால் பாகுாடு நிலவுவதாக பேசியிருந்தார். எனக்கு வரும் வாய்ப்புகள் குறைவதற்கு, மதரீதியான பாகுபாடு காரணமாக இருக்கலாம். ஆனால் அது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என பேசியிருந்தார். அதேபோல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான சாவா படத்திற்கு ரஹ்மான் இசையமைத்திருந்தது கலவையான விமர்சனங்களை பெற்றது. இதுதொடர்பாக பேசிய ரஹ்மான், ” சாவா பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன்” என சொல்லியிருந்தார். இதற்கு பாலிவுட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஹ்மான்.
இந்தியா எனது முன்மாதிரி, என் ஆசான், என் வீடு
சில சமயங்களில் நாம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்படலாம்
ஆனால் இசை மூலம் கலாச்சாரத்தை உயர்த்துவதும் கொண்டாடுவதும் தான் எனது நோக்கம்
நான் ஒருபோதும் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை
என்னுடைய நேர்மை புரியும் என நம்புகிறேன்
நான் இந்தியனாக இருப்பதற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன்
அது ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது
அது கருத்து சுதந்திரத்தை அனுமதித்து பன்முக கலாச்சாரங்களை கொண்ட குரல்களுக்கான வாய்ப்பை கொடுக்கிறது
பிரதமர் முன்னிலையில் வேவ்ஸ் கூட்டமைப்பில் நாகா இசைக்கலைஞர்களுடன் ரோஹி - இ - நூர், ஸ்டிரிங் கலைக்குழு…
சன்சைன் குழு, சீக்ரெட் மவுன்டெயின் குழுவுடனும் இணைந்து நிகழ்ச்சி நடத்தினோம்
இந்தியாவின் முதல் பன்முக கலாச்சாரத்தை கொண்ட இசைக்குழு அது
ஹான்ஸ் ஜிம்மருடன் சேர்ந்து ராமாயணா படத்திற்கு இசையமைப்பது பெருமை
ஒவ்வொரு பயணமும் எனது நோக்கத்தை வலுப்படுத்தியுள்ளது
நான் இந்தியாவிற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்
கடந்த காலத்தை மதிக்கும், நிகழ்காலத்தை கொண்டாடும், எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிக்கும் இசைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்
ஜெய்ஹிந்த்! ஜெய் பாரத்





















