மேலும் அறிய

DMK CONGRESS Alliance: உங்களுக்கு இவ்வளவு தான் ஒதுக்க முடியும்.! கெடுபிடி காட்டிய ஸ்டாலின்- ஷாக்கான காங்கிரஸ்

திமுக கூட்டணியில் கடந்த தேர்தலை விட கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த 35 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பே இல்லையென திமுக தலைமை உறுதியாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்துள்ளது. அடுத்ததாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவில் பாஜக, பாமக, அமமுக, தமாக,ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக,மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளது.

காங்கிரஸ் - திமுக மோதல்

இந்த நிலையில் தான் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி என திமுகவிற்கு தொடர்ந்து இடையூறு கொடுக்க தொடங்கியது காங்கிரஸ். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையையும் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள், ஆட்சியில் பங்கு என ஏகப்பட்ட ஆப்பர்களை அள்ளி கொடுத்தது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவிற்கு எதிரான கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிய தொடங்கினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக நிர்வாகிகளும் கருத்துகளை கூறி வந்தனர். 

இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கும் வகையில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுத்து காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்தது திமுக, இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடியாது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா.? அல்லது முறிவடையுமா.? என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்,  நிர்வாகிகளை கண்டிக்கும் வகையில் கூட்டணி தொடர்பாக வெளியில் எந்தவித தகவலையும் தெரிவிக்க கூடாது என காங்கிரஸ் உத்தரவிட்டது.  

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்

இந்த நிலையில் தான் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை திமுக நேற்று தொடங்கியது. அதில் முதல் ஆளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது 5 தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என ஐயூஎம்எல் எதிர்பார்த்த நிலையில், 2 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும் கூட்டணியில் புதிதாக கட்சிகள் இணைந்துள்ளதால் மற்ற கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீடு எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் திமுகவும் கடந்த முறை 173 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது 165 தொகுதிகளில் மட்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்

இதனையடுத்து நேற்று இரவு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபல் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு குறைந்தது 35 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் திமுக தரப்போ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 25 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

தற்போது கூடுதலாக 2 இடங்களை சேர்த்து 27 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லையென கூறப்படுகிறது. எனவே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையின் போது தான் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக தெரியவரும். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சினிமா பாணியில் தப்பி ஓட்டம்.. செய்தியாளர்களைத் திசைதிருப்பி காரில் பறந்த சசிகலா: தைலாபுரத்தில் நடந்தது என்ன?
சினிமா பாணியில் தப்பி ஓட்டம்.. செய்தியாளர்களைத் திசைதிருப்பி காரில் பறந்த சசிகலா: தைலாபுரத்தில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget