மேலும் அறிய
Top 10 News Headlines: சென்னை வரும் பியூஷ் கோயல், காங். மீது மோடி விமர்சனம், சூர்யவன்ஷிக்கு ஜாக்பாட் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Feb.23rd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்ப்பு.
- தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல். காலையிலிருந்து மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெயிாகி வருகிறது.
- திமுக-விடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக மமக தகவல். முதல் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய ஜவாஹிருல்லா, உதயசூரியன் சின்னத்தில் தான் மமக போட்டியிடும் என கூறியுள்ளார்.
- வேலூரில் இன்று நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பு - QR CODE உடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி.
- வரும் 26-ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிமனையை திறந்து வைக்கிறார்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்து ரூ.1,18,880-க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.300-க்கு விற்பனை.
- டெல்லி ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சட்டையின்றி போராடியது குறித்து விமர்சித்துள்ள பிரதமர் மோடி, “காங்கிரஸ் நிர்வாணமாக உள்ளது என நாட்டிற்கு ஏற்கனவே தெரியும். அப்படி இருந்தும், ஆடைகளை களைய வேண்டிய அவசியம் காங்கிரஸாருக்கு ஏன் வந்தது.?“ என கேட்டுள்ளார்.
- ராஜஸ்தானில் இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை தர மறுத்த பாஜக முன்னாள் எம்.பி. சுக்பிர் சிங். பிரதமரை பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கெல்லாம் உதவி செய்ய முடியாது என காட்டமாக கூறியதால் சர்ச்சை.
- U19 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் விளையாடிய அதிரடி நாயகன் வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டி ரூ.50 லட்சம் பரிசு வழங்கினார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.
- நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 17 பேர் பலி.
- மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் எல் மென்ச்சோ சுட்டுக் கொலை. உயர்மட்டத் தலைவன் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஆயுதமேந்திய குழுக்கள் பல்வேறு மாநிலங்களில் மோதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டில் பரபரப்பு.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























