"இந்தியில் மதம் பார்க்கிறாங்க திறமை இல்லாதவரிடம் அதிகாரம்” AR.ரஹ்மான் பேச்சால் சர்ச்சை | AR Rahman on Hindi
கலைத்துறையில் திறமையானவர்களை விட, அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது தற்போது இந்தி திரை உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக இந்தித் திரையுலகில் நிலவி வரும் சூழல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் தெரிவித்துள்ளார். ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தித் திரைத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
இந்தித் திரையுலகில் தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், "நான் அதை ஒருபோதும் நேரடியாக உணர்ந்ததில்லை. கடவுள் அதை என்னிடமிருந்து மறைத்திருக்கலாம்". இருப்பினும், கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தித் திரைத்துறை முற்றிலும் மாறிவிட்டதாகவும், அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
இந்தித் திரையுலகில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் சென்றுவிட்டது. யார் இசையமைக்க வேண்டும் என்பதைத் தற்போது இவர்களே தீர்மானிக்கிறார்கள். மதரீதியாகக் கூட சில பாகுபாடுகள் இருந்திருக்கலாம், ஆனால் அவை என் முகத்திற்கு நேராக நடக்கவில்லை.
திரைப்பட வாய்ப்புகள் குறைவது குறித்துப் பேசிய அவர், "நான் வேலைக்காக யாரிடமும் செல்வதில்லை. எனது வேலையில் நான் காட்டும் நேர்மையும் உழைப்புமே எனக்குத் தேவையான வாய்ப்புகளைத் தேடித் தரும்," என்று மிகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். கலைத்துறையில் திறமையானவர்களை விட, அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது தற்போது திரை உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஹான்ஸ் சிம்மர் ஒரு யூதர், நான் ஒரு முஸ்லிம், ராமாயணம் இந்து மதத்தைச் சேர்ந்தது. நாங்கள் இந்த இந்தியில் ராமாயணம் படத்திற்கு இணைந்து இசையக்கிறோம். அது இந்தியாவில் இருந்து அன்புடனும் பாசத்துடனும் உலகம் முழுவதையும் சென்றடைகிறது,' என்று ஏ,ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.





















