மேலும் அறிய

DMK Alliance plan: மதிமுக, மமக-விற்கு எத்தனை தொகுதிகள்.! திமுகவுடன் பேச்சுவார்த்தையில் கேட்டது என்ன.? கிடைப்பது இது தானா.!!

DMK Alliance plan: சட்டமன்ற தேர்தலையொட்டி தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்கும் வகையில் திமுக தனது கூட்டணி கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று மதிமுக மற்றும் மமகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

நெருங்கும் தேர்தல்- தொகுதி பங்கீடு தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதன் படி முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதன் படி அக்கட்சியுடன் டி.ஆர். பாலு தலைமையிலான  குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முஸ்லிம் லீக் கட்சிகளோடு திமுக பேச்சுவார்த்தை

அப்போது தங்களுக்கு கடந்த முறை 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தற்போது 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத திமுக பேச்சுவார்த்தைக்குழு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று காலை மனித நேய மக்கள் கட்சி மற்றும் மதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தங்கள் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். ஆனால் 2 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க வாய்ப்பு எனவும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இன்றைய பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?

அடுத்தாக மதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை அதிகரித்து தர வேண்டும் என மதிமுக சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போது தனி சின்னத்தில் போடியிட இருப்பதாகவும், இது மட்டுமில்லாமல் மதிமுகவிற்கு ராஜ்யசபா இடம் ஒதுக்க வேண்டும் என பேச்சுவார்த்தையில் மதிமுக சார்பாக வலியுறுத்தப்ப்பட்டதாக மதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மதிமுகவிற்கு தனி சின்னத்தில் போட்டியிடும் வகையில் 6 தொகுதிகளை ஒதுக்க திமுக தயாராக இல்லையென தகவல் வெளியாகியுள்ளது. எனவே மதிமுகவினரின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட திமுக பேச்சுவார்த்தைக் குழு முதலமைச்சரை சந்தித்து ஆலோசித்த பிறகு ஓரிரு நாட்களில் முடிவை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மற்றும் மநீம ஆகிய கட்சிகளுடன் வருகிற 26 மற்றும் 27ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget