DMK Vs Congress | டர்ரு விடும் காங்கிரஸ் ஸ்டாலின் சீக்ரெட் Operation தட்டி தூக்கிய தளபதிகள்
அதிமுக பக்கம் சாயவிருந்த தேமுதிகவை கே.என்.நேரு, எ.வ.வேலுவை வைத்து சரியான நேரத்தில் திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளார் ஸ்டாலின். இந்த கூட்டணியை வைத்து காங்கிரஸுக்கும் கட்டம் கட்டப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பங்கேற்ற தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக வாய்மொழியாக உறுதி அளித்தது. ஆனால், இறுதியில் தேமுதிகவுடன் அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லையென அதிமுக கைவிரித்தது. இதனால், அதிருப்தியடைந்த பிரேமலதா அதிமுகவை விமர்சித்தார்.
இருப்பினும், மீண்டும் இரு தரப்பும் 2026 தேர்தலுக்காக சமரச உடன்படிக்கைக்கு வந்தன. அதிமுகவுடன் திரைமறைவில் தேமுதிக பேசி வந்த நிலையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இந்த முறை தருவதாக அதிமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதிசெய்யப்பட்டதாக நிர்வாகிகள் நினைத்து கொண்டிருந்தனர். ஏற்கனவே அதிமுக சீட் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதால் பிரேமலதா தயகத்திலேயே இருந்ததாக சொல்கின்றனர்.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி இறுதிச் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான பின்னரே அமைச்சர் ராஜகண்ணப்பன், தேமுதிக எல்லாம் ஒரு கட்சியே இல்லையென்று விமர்சித்தார். ஆனால், கடைசி நேரத்தில் களத்தில் இறங்கிய அமைச்சர்கள் ஏ.வே.வேலுவும், கே.என்.நேருவும் பிரேமலதா, சுதீஷிடம் பேசி, கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்கு கொடுத்து தேமுதிகவை திமுக கூட்டணிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 2016ல் விஜயகாந்த இருக்கும்போது நடைபெறாத கூட்டணி கணக்கை இப்போது எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு மூலம் நடத்திக் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தேமுதிக கூட்டணிக்குள் கொண்டு வந்ததன் மூலம் காங்கிரஸுக்கு திமுக கட்டம் கட்டியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஆட்சியில் பங்கு விவகாரத்தை வைத்து மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திமுகவை விமர்சித்து வந்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் தேசிய காங்கிரஸ் தலைமைக் எடுக்கவில்லை. இதனால் கோபத்திலும் அதிருப்தியிலும் இருந்த திமுக தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து காங்கிரஸுக்கு மறைமுக மெசேஜை அனுப்பியுள்ளதாக சொல்கின்றனர். தேமுதிக காங்கிரஸ் கூட்டணிக்குள் வந்திருக்கும் நிலையில், இனி காங்கிரஸ் கட்சியினர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கவும் திமுக நிர்வாகிகள் தயாராகி வருவதாக பேச்சு இருக்கிறது.























