World Masters Athletics 2022: பஞ்சாயத்து தலைவர் டூ மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் பதக்கம்.. 80 வயது முன்னாள் எம்.எல்.ஏ-வின் பயணம்
80 வயதான ஜேக்கப் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
![World Masters Athletics 2022: பஞ்சாயத்து தலைவர் டூ மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் பதக்கம்.. 80 வயது முன்னாள் எம்.எல்.ஏ-வின் பயணம் World Masters Athletics 2022: 80 year old ex Kerala MLA won two bronze medals in World Athletics Championships World Masters Athletics 2022: பஞ்சாயத்து தலைவர் டூ மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் பதக்கம்.. 80 வயது முன்னாள் எம்.எல்.ஏ-வின் பயணம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/9c67fddb0f571cdd441995172254ccd71657609871_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஃபின்லாந்து நாட்டில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் 35 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்காக வயது வாரியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு ஃபின்லாந்து நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் எம்.ஜே.ஜேக்கப் பங்கேற்றார்.
இவர் 200 மீட்டர் மற்றும் 80 மீட்டர் தடை ஓட்ட பந்தயத்தில் பங்கேற்றார். அதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஜேக்கப் பங்கேற்றார். 200 மீட்டர் தடை ஓட்டபந்தயத்தை 3வதாக கடந்து இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் 80 மீட்டர் தடை ஓட்ட பந்தயத்திலும் இவர் மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
யார் இந்த ஜேக்கப்?
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஜே.ஜேக்கப். இவர் சிறு வயது முதல் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகள் சிறப்பான தடகள போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வந்துள்ளார். குறிப்பாக கல்லூரி காலத்தில் இவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் செய்த ரெக்கார்டு பல ஆண்டுகள் இருந்துள்ளது. அதன்பின்னர் ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக இவர் விளையாட்டை விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டை விட்ட பிறகு ஜேக்கப் ஒரு அரசியல்வாதியாக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில் இவர் திருமாரடி பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி வந்துள்ளார். அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 2006-2011 வரை பிரவோம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். அதன்பின்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் ஜேக்கப் தோல்வி அடைந்துள்ளார்.
அரசியல் வாழ்க்கைக்கு பிறகு மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த ஜேக்கப் திட்டமிட்டுள்ளார். இதற்காக இவர் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அத்துடன் தினமும் 4 கிலோ மீட்டர் ஓடி பயிற்சி செய்து வந்துள்ளார். அத்துடன் 2014,2016 மற்றும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இவர் பங்கேற்றுள்ளார்.
தற்போது 4வது முறையாக உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ள ஜேக்கப் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதன்காரணமாக தன்னுடைய நீண்ட நாள் ஆசையை இவர் நிறைவேற்றியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)