Ghibli Images: கிப்லி ஃபோட்டோஸ் என்றால் என்ன? காசே வேண்டாம், இலவசமாக மாற்றுவது எப்படி? வழிமுறை இதோ..!
Ghibli Images Tips: உங்கள் புகைப்படங்களை ஜப்பானிய ஸ்டைல் கிப்லி புகைப்படமாக மாற்றுவது எப்படி? என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Ghibli Images Tips: புகைப்படங்களை சாட்ஜிபிடி இல்லாமலேயே ஜப்பானிய ஸ்டைல் கிப்லி புகைப்படமாக மாற்றுவதற்காக வழிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் கலக்கும் கிப்லி ஃபோட்டோஸ்:
இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் ட்விட்டர் என்ற நாம் தினசரி பயன்படுத்துன் சமூக வலைதளங்கள் அனைத்தும் அனிமே புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன. கடந்த 48 மணி நேரத்தில் ஸ்டுடியோ கிப்லியின் அனிமேஷன் படங்கள் இணையத்தில் புயலாகி பரவி வருகின்றன. கிளாசிக் கோலிவுட் ஸ்டில்கள் முதல் வைரல் மீம்ஸ்கள் வரை அனைத்தையும் மக்கள் ஜப்பானிய அனிமேஷனால் ஈர்க்கப்பட்ட கிப்லி புகைப்படங்களாக மாற்றி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பயனர்கள் மீம்ஸ்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், தங்கள் படங்களையும் ஜப்பானிய அனிமே பாணியாக மாற்றி வருகின்றனர். ,OpenAI இன் ChatGPT-4o அறிமுகப்படுத்திய புதிய வசதிக்குப் பிறகு இந்த நடைமுறை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த அம்சம் ChatGPT Plus, Pro, Team மற்றும் Select சந்தா அடுக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும். ChatGPT பயனர்களை அதிகபட்சமாக 3 படங்களை மட்டுமே இலவசமாக கிப்லி புகைப்படமாக மாற்ற அனுதிக்கிறது.
The Ghibli Trump Shimmy Dance
— 𝕏erias (@xerias_x) March 29, 2025
20 second re-creation of the original. pic.twitter.com/WrA2Z1mlEf
கிப்லி படங்களை இலவசமாக உருவாக்குவது எப்படி?
வரம்பற்ற கிப்லி-பாணி படங்களை இலவசமாக உருவாக்குவது எப்படி என்பது குறித்த படிப்படியான வழிகாட்டி இங்கே:
ஜெமினி வழியாக கிப்லி-பாணி படங்கள்
1. ஜெமினி AI தளத்திற்குச் சென்று உள்நுழையவும்.
2. சாட் பாக்ஸில், நீங்கள் உருவாக்க விரும்பும் படத்தின் சுருக்கமான விளக்கத்தை வழங்கவும்.
3. உங்கள் செய்தியை சமர்ப்பிக்கவும்.
4. AI ஒரு படத்தை உருவாக்கும், அதை நீங்கள் ஆன்லைனில் இடுகையிடலாம்.
Grok வழியாக கிப்லி-பாணி படங்கள்
1. Grok வலைத்தளம் அல்லது பயன்பாட்டைப் பார்வையிடவும்.
2. காகித கிளிப் (Paper Clip) ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் படத்தை பதிவேற்றவும்.
3. படத்தை 'கிப்லிஃபை' செய்ய AI-யிடம் கேளுங்கள்.
4. ஒரு கிப்லி-பாணி படம் உருவாக்கப்படும், மேலும் திருப்தி அடையவில்லை என்றால், நீங்கள் படத்தைத் திருத்தவும் முடியும்.
இந்த இரண்டையும் தவிர, மக்கள் DeepAI, Craiyon மற்றும் Playground AI போன்ற மூன்றாம் தரப்பு தளங்களையும் பயன்படுத்தலாம். நீங்கள் கற்பனை செய்ததைப் பற்றிய விரிவான குறிப்புடன் ஒரு படத்தைப் பதிவேற்றவும் அல்லது உங்கள் சொந்தப் படத்தை அப்லோட் செய்து, அதை Studio Ghibli பாணியாக மாற்றச் சொல்லவும்.
ஸ்டுடியோ கிப்லி என்றால் என்ன?
ஸ்டுடியோ கிப்லி என்பது அதன் உயர்தர அனிமேஷன் மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற ஒரு ஜப்பானிய அனிமேஷன் நிறுவனமாகும். ஹயாவோ மியாசாகி என்பவரால் நிறுவப்பட்ட இந்த ஸ்டுடியோ, ஸ்பிரிட்டட் அவே, மை நெய்பர் டோட்டோரோ மற்றும் கிகிஸ் டெலிவரி சர்வீஸ் போன்ற பாராட்டப்பட்ட அனிமேஷன் படங்களுக்கு பெயர் பெற்றது.





















