Wrestlers Food Poison: ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த இளம் மல்யுத்த வீரர்கள் - உணவு ஒவ்வாமையால் பயிற்சியாளர் பாதிப்பு
பீகாரில் ரயிலில் பயணித்த இளம் மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர், உணவு ஒவ்வாமை போன்ற காரணங்களால் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் ரயிலில் பயணித்த இளம் மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் திடீர் உடல் நலக்குறைவால் பாத்க்கப்பட்டுள்ளனர்.
ரயிலில் பயணித்த வீராங்கனைகள்:
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கடந்த கடந்த அக்டோபர் 1 முதல் 7ம் தேதி வரை இளம் வீரார்களுக்கான, ஜுனியர் மல்யுத்த போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அசாமை சேர்ந்த 6 வீராங்கனைகள் தங்களது பயிற்சியாளருடன் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த ரயிலில் பயணித்து பாட்னா வந்துள்ளனர். அங்கு ரயில் நிலையம் அருகே இருந்த உணவகத்தில் உணவு உண்டுள்ளனர். தொடர்ந்து, பிரம்மபுத்திரா ரயிலில் ஏறியுள்ளனர்.
மயங்கி விழுந்த வீராங்கனைகள்:
மல்யுத்த வீரர்களுக்கு இந்த ரயிலில் முன்பதிவு இல்லாததால், கடும் நெரிசலையும் பொருட்படுத்தாமல் பொதுப் பெட்டியில் ஏறினர். கூட்ட நெரிசல் காரணமாக வெப்பம் மற்றும் வியர்வை வெளியேற்றம் மிக அதிகமாக இருந்ததாலும், சோர்வடைந்த வீராங்கனைகள் கியூல் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது அவர்களது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
பயிற்சியாளர் பப்புகுமார் உடனடியாக வீராங்கனைகளை ஏசி பெட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து ரயில் ஜமால்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும், பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஜோதி (15). மௌசாமி (13).சஞ்சீதா (14). பிரணிதா (13). பிரிப்கார் தாஸ் (17) மற்றும் சுனிதா (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Rajasthan Election: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதியில் மாற்றம்.. இதான் காரணமா?
மருத்துவர்கள் சொல்வது என்ன?
”வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு பூர்வாங்க சிகிச்சை அளித்துள்ளோம். அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து, அபாய கட்டத்தை தாண்டியுள்ளனர்" என்று ஜமால்பூர் ரயில்வே மருத்துவமனையின் பொறுப்பாளர் சஞ்சய் குமார் கூறினார். அதிகப்படியான உடல் வெப்பம் மற்றும் நிர் வெளியேற்றம் ஆகியவற்றால் வீராங்கனைகள் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு ஒவ்வாமை காரணமாக பயிற்சியாளரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.