Gautam Gambhir: "கோலி.. கோலி.." ஹைதரபாத் போட்டியில் கம்பீரை சீண்டிய ரசிகர்கள்...!
ஹைதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மைதானத்திற்குள் வந்த கம்பீரை பார்த்து ரசிகர்கள் கோலி கோலி என்று கோஷமிட்ட வீடியோ வைரலாகியது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணியின் முன்னாள் கேப்டனும், எல்.எஸ்.ஜி. அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கும் நடந்த மோதல் அனைவரும் அறிந்ததே ஆகும்.
கம்பீரை சீண்டிய ரசிகர்கள்..!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் தொடங்கிய பனிப்போர் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.இன்று லக்னோ மற்றும் ஹைதராபாத் க்கு இடையிலாக போட்டியில் கம்பீரை பார்த்ததும் ரசிகர்கள் கோலியின் பேரைச் சொல்லி கம்பீரை சீண்டியுள்ளார்கள்
'Kohli Kohli' chants the Hyderabad crowd in front of the Lucknow Supergiants' dugout.pic.twitter.com/rRS6XGyTVe
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 13, 2023
விராட்கோலி - கவுதம் கம்பீர் இடையே நடந்த மோதல் மிகவும் பரபரப்பாக இந்த ஐ.பி.எல். தொடரில் பேசப்பட்டது. மேலும், அந்த போட்டியில் விராட்கோலி - நவீன் உல் ஹக் மோதலும் வைரலானது. இதுதொடர்பா, நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இந்தப் பதிவில் நீங்கள் ஒருவரிடம் மரியதையாக நடந்துகொண்டீர்கள் என்றால் உங்களுக்கும் மரியாதை வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து கம்பீரும் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமான ஒரு கருத்தைப் பகிர்ந்தார். அண்மையில் விராட்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாண்ட் அப் காமெடி ஒருவரின் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவில் ‘இன்னொருவரின் வெறுப்பை சுமந்து செல்வது எனது வேலை இல்லை அதை பற்றி நான் கவலைப்படப் போவதில்லை என அந்த கமீடியன் பேசும் பகுதியை பகிர்ந்திருந்தார் கோலி.கோலி யாரையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் ரசிகர்கள் அனைவரும் இதை கம்பீருக்கான பதிலாகவே இதை எடுத்துக்கொண்டார்கள்.
கோலிக்கு ரவி சாஸ்திரி ஆதரவு:
கம்பீர் மற்றும் கோலி ஆகிய இருவருக்கு இடையிலான இந்த பிரச்சனையை மூத்த கிரிக்கெட் விரர்கள் பல வகையான கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். சிலர் கோலி தனது கோபத்தை கட்டுபடுத்திக்கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள் ஆனால் ரவி ஷாஸ்த்ரி கோலியைப் பற்றி மிக சுவாரஸ்யமான கருத்தை தெரிவித்துள்ளார். கோலி தன்னை மாற்றிகொள்ள தேவையில்லை அவரது கோபமான குணம் அவரது பெர்ஸ்னாலிட்டிக்கு பொருந்துகிறது.
ஆனால் இந்த பிரச்சனையை இவர்கள் விட்டாலும் ரசிகர்கள் எளிதில் விடுவதாக இல்லை.இந்த நிகழ்வில் ரசிகர்களில் ஆதரவு கோலிக்கே.இன்று கம்பீரை பார்த்து கோலி கோலி என்று ரசிகர்கள் கத்தியுள்ளது இந்த பிரச்சனை ம்ஏலும் வேறு ஒரு இடத்தில் வெறுப்பாக வெளிப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.கோலி அல்லது கம்பீர் தங்களது ரசிகர்களிடம் தாங்களாகவே முன்வந்து இந்த பிரச்சனையை மேற்கொண்டு வளர்க்காமல் இருக்க வலியுறுத்துவார்களா..
இந்த பிரச்சனை தொடர்பாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் நகைச்சுவையான போட்ட ஒரு ட்வீட் இணையதளத்தில் மிகவும் பிரபலமானது. ’கோலி மற்றும் கம்பீர் இருவரையும் இணைந்து கோகா கோலா விளம்பரத்தில் நடிக்க வைப்பது நல்லது என நினைக்கிறேன் என அவர் ஐடியா கூறியிருந்தார்.அதையாவது இவர்கள் செய்யலாம்..