SRH vs CSK Innings Highlights: ஷிவம் துபேவின் அதிரடி ஆட்டம்..ஹைதராபாத்துக்கு 166 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 45 ரன்களை குவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் 18 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. அந்தவகையில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஷிவம் துபேவின் அதிரடி ஆட்டம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷிவம் துபே களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அந்த அணிக்கு அமைத்துகொடுத்தனர். கடந்த போட்டியில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த ரச்சின் ரவீந்திரா இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இன்றைய போட்டியிலும் ரச்சின் ரவீந்தாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மொத்தம் 9 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
புவனேஷ்குமார் வீசிய 3 வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது அஜிங்க்யா ரஹானே கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அருமையான ஜோடி அமைத்து ரன்களை பெற்றுக்கொடுத்தனர். அப்போது ருதுராஜ் கெய்க்வாட் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 21 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் உட்பட 26 ரன்கள் எடுத்தார். பின்னர் ரஹானே உடன் ஜோடி சேர்ந்தார் ஷிவம் துபே. 24 பந்துகள் களத்தில் நின்ற ஷிவம் துபே அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 45 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
Wake Up 👉🏼SIX 👉🏼 🔁#WhistlePodu #SRHvCSKpic.twitter.com/ysv7fyY3eo
— Chennai Super Kings (@ChennaiIPL) April 5, 2024
இதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதேபோல், ரஹானே 30 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என 35 ரன்கள் எடுத்தார். ரவீந்தர ஜடேஜா 31 ரன்கள் எடுக்க மிட்செல் 13 ரன்கள் என 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
மேலும் படிக்க: Shashank Singh PBKS: பெயர் குழப்பத்தால் மாற்றி எடுக்கப்பட்ட வீரர்! அனைவரின் கவனத்தையும் ஷஷாங்க் ஈர்த்தது எப்படி?
மேலும் படிக்க: Suryakumar Yadav: மாஸாக மீண்டு(ம்) வந்த சூர்யகுமார்; வெளியான கெத்து வீடியோ; குஷியில் ரசிகர்கள்!