RCB vs PBKS Match Highlights: 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB; ப்ளேஆஃப் வாய்ப்பினை இழந்த பஞ்சாப்!
IPL 2024 RCB vs PBKS Match Highlights: பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கின்றது.
17 ஆவது ஐபிஎல் தொடரின் 58 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்சனையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பில் நீடிக்கும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கியது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் சேர்த்தது. பெங்களூர் அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 92 ரன்களும் ரஞ்சித் படிதார் 23 பந்தில் 55 ரன்கள் சேர்த்திருந்தனர்.
அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது முதல் ஓவரின் நான்காவது பந்தில் பிரப் சிம்ரன் தனது விக்கெட்டினை இழந்தார். அடுத்து கைகோர்த்த ஜானி பேரிஸ்ட்ரோ மற்றும் ரிலீ ரோசோவ் கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதனால் பவர் பிளேவில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே இருந்தது. பவர் பிளேவின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்து இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரூசோ 21 பந்துகளில் தனது அரை சதத்தினை பூர்த்தி செய்தார். சிறப்பாக விளையாடி வந்த இவர் தனது விக்கெட் இணை கரண் சர்மா பந்தில் இழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த இம்பேக்ட் பிளேயர் கரண் சர்மா பந்தில் கிளீன் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். லிவிங்ஸ்டனம் தனது விக்கெட்டினை பிரண்நேரம் எடுக்காமல் இழந்தார். இதனால் பஞ்சாப் அணி பெரும் நெருக்கடிக்கு ஆளானது. களத்தில் இருந்த ஷஷாங்க் சிங்குடன் கேப்டன் ஷாம் கரண் இணைந்து விளையாட ஆரம்பித்தார்.
14 வது ஓவரின் மத்தியில் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எட்டியது. இதே ஓவரின் நான்காவது பந்தில் ஷஷாங் சிங் ரன் அவுட் ஆக ஆட்டம் மெல்ல மெல்ல பெங்களூரு அணியின் கட்டுக்குள் வந்தது.
ஆனாலும் பஞ்சாப் அணியின் ரசிகர்களுக்கு கேப்டன் சாம் கரன் மீதும் அசுடோஷ் சர்மா மீதும் நம்பிக்கை இருந்தது. 15 ஓவர்கள் முடியும்போது பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்திருந்தது. 15வது ஓவரின் கடைசிப் பந்தில் அஷுதோஷ் சர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் சாம் கரண் வெளியேறினார்.
இறுதியில் பஞ்சாப் அணியால் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுக்கவே முடிந்தது. இதனால் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலேயே நீடித்தாலும், - 0.049ஆக இருந்த ரன்ரேட்டினை +0.217ஆக உயர்த்தியது.