IPL 2022, GT vs RR: பட்லர் பாஸ் அதிரடி... குஜராத் வெற்றிபெற 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்!
குவாலிஃபையர் 1-ல் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்; தோல்வியடையும் அணி குவாலிஃபையர் 2ல் பங்கேற்கும் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் பிளேப் ஆப் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகள் மோதி வருகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்ஸ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்லர்ஸ் அணியும் இறுதிச்சுற்றுக்கு போட்டியிட்டு வருகிறது. குவாலிஃபையர் 1-ல் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்; தோல்வியடையும் அணி குவாலிஃபையர் 2ல் பங்கேற்கும் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். யஷ் தயால் வீசிய ஓவரில், ஓப்பனர் யஷஸ்வி ஜேஸ்வால் அவுட்டாகி வெளியேறினார். இதனால், 11/1 என்ற நிலையில் ராஜஸ்தானுக்கு சொதப்பலான ஓப்பனிங்காக அமைந்தது.
ஆனால், அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லருடன் கைகோர்த்து அதிரடியை காட்டினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 47 ரன்கள் எடுத்து அவுட்டாக, அரை சதம் மிஸ்ஸானது. விக்கெட் சரிந்தாலும் இன்னொரு புறம் தனது அதிரடியை தொடர்ந்த பட்லர், அரை சதம் கடந்து விளையாடினார்.
𝗜𝗻𝗻𝗶𝗻𝗴𝘀 𝗕𝗿𝗲𝗮𝗸!@josbuttler's 89 & Captain @IamSanjuSamson's 47 power @rajasthanroyals to 188/6. 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 24, 2022
The @gujarat_titans chase to commence soon. 👍 👍
Scorecard ▶️ https://t.co/O3T1ww9yVk#TATAIPL | #GTvRR pic.twitter.com/2JDqyDQSLX
சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது, 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அநியாயமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். குஜராத் அணியைப் பொறுத்தவரை, ஷமி, யஷ் தயால், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருக்கிறது. இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு செல்ல குஜராத் அணியும், அந்த அணியின் கனவை தகர்க்கும் பணியில் ராஜஸ்தானும் ஈடுபட உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்