IPL 2021, PBKS vs RR: கடைசி ஓவரில் போட்டியை வென்ற ராஜஸ்தான்.... 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி
இரு அணிகளும் இதற்கு முன்பு துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதியதில்லை. இன்று விளையாடப்போகும் போட்டியே, துபாயில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் போட்டியாகும்.
LIVE
Background
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், இன்று பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 7வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் பின் தங்கி உள்ளதால், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்க உள்ளனர். ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இந்த போட்டியில் வெற்றி முக்கியம் என்பதால், இரு அணிகளும் டஃப் கொடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் இதற்கு முன்பு துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதியதில்லை. இன்று விளையாடப்போகும் போட்டியே, துபாயில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் போட்டியாகும்.
விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்த பஞ்சாப்.... 60+ ரன்களில் அகர்வால்... அரை சதம் நோக்கி ராகுல்
விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் அடித்த பஞ்சாப் கிங்ஸ்
Solid start for @PunjabKingsIPL in the chase! 👏 👏@klrahul11 & @mayankcricket complete a brisk half-century stand.👍 👍 #VIVOIPL #PBKSvRR
— IndianPremierLeague (@IPL) September 21, 2021
Follow the match 👉 https://t.co/odSnFtwBAF pic.twitter.com/v1jA3yxizR
தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் - ஐபிஎல் போட்டியில் 3000 ரன்கள் அடித்த கே.எல்.ராகுல்
இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வரும் பஞ்சாப் அணி 5 ஓவர்களின் முடிவில் 41 ரன்கள் அடித்துள்ளது. சேத்தன் சக்காரியா பந்துவீச்சில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட ராகுல், ஐபிஎல் போட்டியில் 3000 ரன்களை குவித்தார். ராகுல் 30 , மயங்க் அகர்வால் 9 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.
𝑾𝒆 𝒍𝒐𝒗𝒆 𝒚𝒐𝒖...#CaptainPunjab #SaddaPunjab #IPL2021 #PunjabKings #PBKSvRR pic.twitter.com/71McGm3Qg9
— Punjab Kings (@PunjabKingsIPL) September 21, 2021