ICC Men T20 World Cup: விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?
ஐபிஎல்லில் இருந்து இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள 5 விக்கெட் கீப்பர்களை இங்கே காணலாம்.
ஐபிஎல் 2024க்கு முன்பு வர, டி20யில் இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா இருந்தார். ஐபிஎல் போட்டிக்கு டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கிட்டதட்ட 5 வீரர்கள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் ஜிதேஷ் சர்மா எதிர்பார்த்த மாதிரி சிறப்பாக எதையும் செய்யவில்லை. விபத்துக்குக் பிறகு ரிஷப் பண்டும், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்காக தனது டி20 போட்டியில் கே.எல்.ராகுலும் ஐபிஎல் 2024ல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனுடன் சஞ்சு சாம்சனும் விக்கெட் கீப்பராக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக முயற்சித்து வருகிறார்.
இந்தநிலையில், ஐபிஎல்லில் இருந்து இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள 5 விக்கெட் கீப்பர்களை இங்கே காணலாம்.
சஞ்சு சாம்சன்:
இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சஞ்சு சாம்சன் இதுவரை 9 போட்டிகளில் 36 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்கள் உதவியுடன் 161 ஸ்ட்ரைக் ரேட்டில் 385 ரன்கள் எடுத்துள்ளார். நேத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 197 ரன்களை துரத்தியபோது, 71 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
ரிஷப் பண்ட்:
விபத்து காரணமாக சுமார் 15 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த ரிஷப் பண்ட், ஐபிஎல் 2024ல் இருந்து மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். ஐபிஎல் 2024ன் தொடக்கத்தில் சற்று ரன்களை குவிக்க கஷ்டப்பட்ட பண்ட், அதன்பிறகு, 10 போட்டிகளில் 46 சராசரி மற்றும் 161 ஸ்ட்ரைக் ரேட்டில் 23 சிக்ஸர்கள் உதவியுடன் 371 ரன்கள் எடுத்துள்ளார்.
கேஎல் ராகுல்:
2022 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேஎல் ராகுல் இந்தியாவுக்காக எந்தவொரு டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. ஓபனராக கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டாலும், டி20யில் டாப் ஆர்டரில் பேட் செய்வதுதான் ராகுலின் பிரச்சனை. தற்போது இந்திய டி20 அணிக்கு 4வது அல்லது 5வது இடத்தில் பேட்டிங் செய்ய கீப்பர் தேவை. இப்படி இருக்க, கேஎல் ராகுல் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும். இந்த ஐபிஎல் சீசனில் கேஎல் ராகுல் 9 போட்டிகளில் 144 ஸ்ட்டைக் டேட்டில் 378 ரன்கள் எடுத்துள்ளார். ராகுலுக்கு ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையாக உள்ளது. மேலும், 14 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.
ஜிதேஷ் சர்மா:
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜிதேஷ் சர்மாவுக்கு ஒரு இடத்தில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், இந்திய்யாவுக்காக டி20யில் 147 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்துள்ளார். இதனால்தான் டி20 உலகக் கோப்பை அணியில் ஜிதேஷ் சர்மா இடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தினேஷ் - இஷான்:
இந்த வரிசையில் தினேஷ் கார்த்திக் மற்றும் இஷான் கிஷன் பெயர்களை அடிப்படுவதை மறக்க முடியாது. டி20யில் இந்தியாவுக்காக இஷான் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், ரஞ்சியில் விளையாடாததால், அவர் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐயால் நீக்கப்பட்டார். இதன் காரணமாக, இந்திய அணியில் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை.
தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஃபினிஷராகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.