GT vs KKR Head to Head Records: கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா குஜராத்..?
GT vs KKR Head to Head Records: நடப்புச் சாம்பியன் குஜராத் அணி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் முடிவுகள் குறித்து இங்கு அறியலாம்.
GT vs KKR Head to Head Records: பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் அணிகளாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நடப்புச் சாம்பியனும் பலமான அணியுமான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதியுள்ளது. அந்த போட்டியில் கொல்கத்தா அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
ஐபிஎல் 2023ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இரண்டாவது முறையாக மோதுகின்றன. முன்னதாக இரு அணிகளுக்கும் இடையேயான மோதலில், KKR 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரபரப்பான இந்தச் சந்திப்பில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, முதல் இன்னிங்சில் 204-4 ரன்களை எடுத்து அசத்தியது. சாய்சுதர்சன் (53), விஜய் சங்கர் (63*) ஆகியோர் அந்த அணிக்காக சிறப்பாக ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் (83), நிதிஷ் ராணா (45) ஆகியோர் அணிக்காக ரன்கள்சேர்த்தனர். அந்த போட்டியை வழிநடத்திய குஜராத் கேப்டன் ரஷித் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி விக்கெட் வேட்டையாடினார். இருப்பினும், கடைசி ஓவரில் கொல்கத்தா அணிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டபோது, இடது கை பேட்டர் ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை அடித்து அணிக்கு நம்பமுடியாத வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி கோப்பையை தன்வசமாக்கியது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்தியன் பிரீமியர் லீக்கில் நேருக்கு நேர் மோதலில், KKR மற்றும் GT இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளன, ஒன்று நடப்பு சீசனிலும் மற்றொன்று கடந்த சீசனிலும். இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடரஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் ஈடன் கார்டன் மைதானத்தில் முதன்முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன.
கொல்கத்தா vs குஜராத் புள்ளி விபரங்கள்
புள்ளிவிவரங்கள் | கொல்கத்தா | குஜராத் |
அதிகபட்ச தனிநபர் மதிப்பெண் | வெங்கடேச ஐயர்- 83 | ஹர்திக் பாண்டியா - 67 |
சிறந்த பேட்டிங் சராசரி | ரின்கு சிங்- 83.0 | ஹர்திக் பாண்டியா- 67.0 |
அதிக ரன்கள் | வெங்கடேச ஐயர் - 100 | ஹர்திக் பாண்டியா - 67 |
சிறந்த பந்து வீச்சு எக்கானமி | ஆண்ட்ரே ரஸ்ஸல் - 5.0 | முகமது ஷமி- 6.0 |
அதிக விக்கெட்டுகள் | ஆண்ட்ரே ரஸ்ஸல் - 4 | ரஷித் கான்- 5 |
சிறந்த பந்துவீச்சு புள்ளிகள் | ஆண்ட்ரே ரஸ்ஸல்- 4/5 | ரஷித் கான்- 3/37 |