Watch Video: எங்கும், எதிலும் சூப்பர் ஸ்டார்.. கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் சிட்டி செய்த செயல்.. இணையத்தில் வைரல்!
ரஜினிகாந்த் என்ற பெயருக்கு பதிலாக ஹாலந்து பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. பின்னணியின் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ஹுக்கும் பாடல் ஒலித்தது.
நடிகர் ரஜினிகாந்தின் ’சூப்பர் ஸ்டார்’ டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலாந்துக்கு ஹைலைட்ஸ் வீடியோவை மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் வெளியிட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் என்றால் யாருக்குதான் பிடிக்காது. ரஜினி காந்த்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாடு, இந்தியா கடந்து ரஜினியின் புகழ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுக்கு சான்றாக தற்போது ஒரு நிகழ்வு நடந்தது. அதுதான் இன்றைய டாப் டிரெண்டிங்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப் மான்செஸ்டர் சிட்டி பதிவேற்றிய வீடியோவில், அந்த அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டை பெருமைப்படுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்தின் ’சூப்பர் ஸ்டார்’ டைட்டில் கார்டை வைத்து, ஹூக்கும் பாடலை ஒலிக்க செய்து பதிவிட்டனர். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர், “உறுதியாக சொல்லுகிறேன். இந்த வேலையை செய்தது தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான்” என்று கமெண்ட் செய்தார்.
View this post on Instagram
அந்த வீடியோவில் கிளாசிக் ரஜினிகாந்தின் டைட்டில் கார்டுடன் மெதுவாக காண்பிக்கப்பட்டு அதில், ரஜினிகாந்த் என்ற பெயருக்கு பதிலாக ஹாலந்து பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. பின்னணியின் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ஹுக்கும் பாடல் ஒலித்தது.
ஜெயிலர் படத்திற்காக பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசைமைக்க, இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
ரஜினிகாந்த் தற்போது டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார், இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் தனது அடுத்த படமான ‘தலைவர் 171’ படத்தில் ஒப்பந்தமானியுள்ளார்.