WPL Auction 2023: எந்தெந்த வீராங்கனைகள் எத்தனை கோடிக்கு ஏலம்..? முழு பட்டியலும் உள்ளே..!
WPL Auction 2023 Sold and Unsold List: மகளிர் பிரிமீயர் லீக் தற்போதைய ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியினால் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன என்ற முழுவிவரத்தை கீழே காணலாம்.
WPL Auction 2023 Sold and Unsold List: மகளிர் பிரிமீயர் லீக் முதல் சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் இன்று மதியம் முதல் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 490 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில், 246 இந்திய வீராங்கனைகளும், 163 வெளிநாட்டு வீராங்கனைகளும் உள்ளனர்.
இந்த ஏலத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை மும்பை அணி ரூ.1.8 கோடிக்கும், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி. அதேபோல், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ஷஃபாலி வர்மாவை 2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
இன்றைய ஏலத்தில் தற்போது வரை 5 உரிமையாளர்கள் அதிகபட்சமாக 90 வீரர்களை ஏலம் எடுத்துள்ளனர். இந்தநிலையில் எந்தெந்த வீராங்கனைகள் எந்தெந்த அணியினால் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன என்ற முழுவிவரத்தை கீழே காணலாம்.
❤️❤️❤️ @mandhana_smriti in RCB #WomensIPL pic.twitter.com/DpdaKeGkRC
— prateek singhai (@singhaiprateek) February 13, 2023
முழு பட்டியல் இதோ:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஸ்மிருதி மந்தனா - ரூ 3.4 கோடி
சோஃபி டெவின் (NZ) - ரூ 50 லட்சம்
எல்லிஸ் பெர்ரி (AUS) – ரூ. 1.7 கோடி
ரேணுகா சிங் – ரூ. 1.5 கோடி
Welcome to RCB 🤗
— 𝐓𝐞𝐣𝐚 🇩 🇭 🇫 🇲 (@Tejaguntur95) February 13, 2023
Smriti Mandhana @mandhana_smriti
Ellyse Perry @EllysePerry
Sophie Devine @sophdevine77
Renuka Singh Thakur
Richa Ghosh @13richaghosh#WomensIPL #PlayBold#WPLAuction pic.twitter.com/kHAx0ycK97
ரிச்சா கோஷ் - ரூ. 1.9 கோடி
மும்பை இந்தியன்ஸ்:
ஹர்மன்ப்ரீத் கவுர் – ரூ. 1.8 கோடி
நாட் ஸ்கிவர்-பிரண்ட் (ENG) - ரூ. 3.2 கோடி
அமெலியா கெர் (NZ) – ரூ. 1 கோடி
பூஜா வஸ்த்ரகர் - ரூ 1.9 கோடி
யாஸ்திகா பாட்டியா - ரூ 1.5 கோடி
குஜராத் ஜெயண்ட்ஸ்
ஆஸ்லே கார்ட்னர் (AUS) – ரூ. 3.2 கோடி
பெத் மூனி (AUS) – ரூ. 2 கோடி
சோபியா டன்க்லே (ENG) - ரூ. 60 லட்சம்
சினே ராணா - ரூ 75 லட்சம்
அன்னாபெல் சதர்லேண்ட் (AUS) - ரூ 70 லட்சம்
டியான்ட்ரா டாட்டின் (WI) - ரூ 60 லட்சம்
ஹர்லீன் தியோல் - ரூ 40 லட்சம்
UP வாரியர்ஸ்
சோஃபி எக்லெஸ்டோன் (ENG) - ரூ. 1.8 கோடி
தீப்தி சர்மா – ரூ. 2.6 கோடி
தஹ்லியா மெக்ராத் (AUS) – ரூ. 1.4 கோடி
ஷப்னிம் இஸ்மாயில் (SA) – ரூ. 1 கோடி
அலிசா ஹீலி (AUS) - ரூ 70 லட்சம்
அஞ்சலி சர்வானி - ரூ 55 லட்சம்
ராஜேஸ்வரி கயக்வாட் - ரூ 40 லட்சம்
ஸ்வேதா செஹ்ராவத் - ரூ 40 லட்சம்
பார்ஷவி சோப்ரா - ரூ 10 லட்சம்
எஸ் யாசஸ்ரீ - ரூ 10 லட்சம்
டெல்லி கேபிடல்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரூ. 2.2 கோடி
மெக் லானிங் (AUS) – ரூ. 1.1 கோடி
ஷஃபாலி வர்மா - ரூ. 2 கோடி
டைட்டாஸ் சாது - ரூ 25 லட்சம்
ராதா யாதவ் - ரூ 40 லட்சம்
ஷிகா பாண்டே - ரூ 60 லட்சம்
மரிசானே கப் (SA) - ரூ 1.5 கோடி
விற்கப்படாத வீராங்கனைகள்:
ஹெய்லி மேத்யூஸ் (WI)
சுசி பேட்ஸ் (NZ)
டாஸ்மின் பிரிட்ஸ் (SA)
லாரா வோல்வார்ட் (SA)
டாம்சின் பியூமண்ட் (ENG)