Sri Lanka vs Pakistan LIVE: இலங்கை அணியின் சொதப்பலான பந்து வீச்சால் பாகிஸ்தான் இமாலய வெற்றி..
SL vs PAK World Cup 2023 LIVE Score: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 2023 லீக் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE

Background
WC 2023 SL Vs Pak LIVE Score: புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தொடர்ந்து இரண்டு போட்டிகளில் பெற்ற தோல்வியால் இலங்கை அணி 8வது இடத்திலும் உள்ளன.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
WC 2023 SL Vs Pak LIVE Score: அடுத்த போட்டி எப்போது..
இலங்கை அணிக்கு அடுத்த போட்டி அக்டோபர் 16ஆம் தேதி லக்னோவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தான் அணிக்கு வரும் 14ஆம் தேதி அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் போட்டிகள் நடைபெறவுள்ளது.
WC 2023 SL Vs Pak LIVE Score: சிக்ஸர்களின் எண்ணிக்கை
இரு அணிகளும் இணைந்து மொத்தம் 15 சிக்ஸர்கள் விளாசியுள்ளன. இதில் இலங்கை அணி அதிகபட்சமாக 9 சிக்ஸர்கள் விளாசியது.
WC 2023 SL Vs Pak LIVE Score: இந்த போட்டியில் மொத்த பவுண்டரிகள்..
இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தம் 62 பவுண்டரிகள் விளாசியுள்ளது. இதில் இலங்கை அதிகபட்சமாக 36 பவுண்டரிகள் விளாசியுள்ளது..
WC 2023 SL Vs Pak LIVE Score: ஆட்ட நாயகன்..
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஸ்வானுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் 121 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி 131 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

