மேலும் அறிய

WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?

வாட்ஸ்அப் குரூப்பிலிருநது தூக்கியதால், ஆத்திரமடைந்து அட்மினை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அது எங்கே என்று தெரியுமா.?

நம் அண்டை நாடான பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு பெயர் போனதுதான் என்றாலும், அதற்காக இப்படியா என்று கேட்கும் அளவிற்கு ஒரு சம்பவம் அரங்கேறயுள்ளது. ஆம், வாட்ஸ்அப் குழுவிலிருந்து தன்னை நீக்கியதற்காக, அந்த குரூப் அட்மினையே ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார்.

மக்கள் மனதுடன் ஒன்றிவிட்ட வாட்ஸ்அப்

இந்த காலத்தில், செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. அதிலும், வாட்ஸ்அப் இல்லாமல் இருப்போர் யாருமே இல்லை என கூறலாம். அந்த அளவிற்கு வாட்ஸ்அப் நம் மக்களோடு ஒன்றிவிட்டது. எந்த நிகழ்வானாலும், அதை வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்வது, ஸ்டேட்டஸில் போடுவது என, மக்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் ஒரு பெரும் மார்க்கமாக  விளங்குகிறது வாட்ஸ்அப். இதில் பல விதமான குழுக்களும் உள்ளன. குடும்பம், சினிமா, விளையாட்டு, அலுவலகம், பெண்கள் குழு, பிசினஸ் குழுக்கள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு குழுவை அமைத்து, அதில் பலர் இணைந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர். வாட்ஸ்அப் குழுக்களில் சில நேரம் வாக்குவாதங்களும் நடைபெறுவதுண்டு. அதில் சில விபரீதங்களும் அரங்கேறுவதுண்டு. அப்படி ஒரு சம்பவம்தான், பாகிஸ்தானில் நடந்துள்ளது.

வாட்ஸ்அப் குரூப் அட்மினை சுட்டுக்கொன்ற நபர்

பாகிஸ்தானின் பெஷாவர் அருகே உள்ள ரெகி எனும் இடம் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ளது. இவ்விரு நாடுகளுமே தீவிரவாதத்திற்கு பெயர் போனவைதான். ரெகி பகுதியில் வசித்துவந்த அஷ்ஃபக்கான் என்பவர், ஒரு சமூக வாட்ஸ்அப் குழுவில் இருந்துள்ளார். அந்த குழுவில் அட்மினாக இருந்தவர் முஷ்டாக். இந்நிலையில், குழுவில் மெசேஜ் செய்யும்போது, இவ்விருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முஷ்டாக், அஷ்ஃபக்கானை குழுவை விட்டு நீக்கியுள்ளார்.

இதையடுத்து, இருவரும் விவகாரத்தை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறிய அஷ்ஃபக், முஷ்டாக்கை ஒரு இடத்திற்கு பேச வருமாறு அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, சமாதானப் பேச்சுவாத்தை நடத்த தனது சகோதரருடன் முஷ்டாக் சென்றபோது, அஷ்ஃபக் தான் கொண்டுவந்த துப்பாக்கியை எடுத்து முஷ்டாக்கை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே முஷ்டாக் இறந்துவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார் அஷ்ஃபக்.

வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கியதற்காகவே அவர் சுடப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த முஷ்டாக்கின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், அஷ்ஃபக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அங்குள்ள சமூக ஊடகங்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இளைஞர்கள் பலரும் சர்வசாதாரணமாக துப்பாக்கி போன்ற உயிர்க்கொல்லி ஆயுதங்களுடன் அலைவதாகவும், சட்டமும் அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்றும் நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரமலான் மாதத்தில் நடந்த இந்த சம்பவம் அவர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
Postal Service: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
Netanyahu: “நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
“நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
Postal Service: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
Netanyahu: “நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
“நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
Trump New Tariff: ஃபர்னிச்சரை கூட விட்டு வைக்காத ட்ரம்ப்; 50 நாட்களில் வரி விதிக்க இருப்பதாக அச்சுறுத்தல்
ஃபர்னிச்சரை கூட விட்டு வைக்காத ட்ரம்ப்; 50 நாட்களில் வரி விதிக்க இருப்பதாக அச்சுறுத்தல்
Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 25-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னையில ஆகஸ்ட் 25-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
Embed widget