கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்
சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
![கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் Abhishekam to Goddess Gayatri at Vishwakarma Siddhi Vinayagar Temple in karur TNN கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/28728d71887c95b70f63c7f52409eb701694756341890113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காயத்ரி தேவிக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பாக செய்திருந்தனர்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம்.
தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தங்க தேரில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மேள தாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து புறப்பட்ட தங்க தேரோட்ட நிகழ்ச்சி ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிகுந்தனர். தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)