மேலும் அறிய
Healthy Diet:ஹெல்தியாக இருக்க விரும்புறீங்களா? இந்த உணவுகளை தவிர்த்திடுங்க!
Healthy Diet: அதிக கலோரி, ட்ரான்ஸ் ஃபேட், உடலுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கக் கூடியவை. அந்த வகையில் நாம் நம் டயட் சார்ட்டில் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய 6 உணவுகளைப் பற்றிக் காண்போம்.

உடல் ஆரோக்கியம்
1/6

ரீஃபைண்ட் ஃப்ளார் அல்லது மைதாவில் நார்ச்சத்து என்பது பெயருக்குக் கூட இருக்காது. இது அதிக க்ளைசிமிக் இண்டக்ஸ் கொண்டது. அதனால் மைதா பதார்த்தங்களை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு எகிறக்கூடும். இது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் பிரச்சனைகள், வளர்சிதை மாற்ற உபாதைகள், இதய நோய்கள் ஆகியனவற்றிற்கு வழிவகுக்கும்.
2/6

அதிலும் செயற்கை இனிப்பும் அதிக தேவையற்ற கலோரிகளும் இணைந்த சர்க்கரை அதிகமாக உடலில் சேரும்போது கெட்ட கொழுப்பாக மாறி உடல் பருமனை ஏற்படுத்துவதோடு கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவையும் குறைக்கிறது. அதனால் இரத்தத்தில் சர்க்கரைஅளவு அதிகரித்து நீரிழிவு நோயை உண்டாக்கிவிடும். வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக தேன், வெல்லம், அத்திப்பழம், ப்ரூன்ஸ், பேரீச்சம்பழம், ஏப்ரிகாட்ஸ் ஆகியனவற்றை பயன்படுத்தலாம்.
3/6

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றத்து அல்ல. சோடியம் நைட்ரேட் மற்றும் நைட்ரைட் கொண்டே பதப்படுத்துகின்றனர். இவை கான்சர் உண்டாக்கும் காரணிகள் கொண்டவை. ஆகையால் இவற்றை தொடர்ச்சியாக உண்ணும் போது நம் உடலுக்குள் கான்சர் செல்கள் உருவாவதை நாமே ஊக்குவிக்கிறோம்.
4/6

நிறைய பிஸ்கட்கள், கேக்குகள், பேஸ்ட்ரிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், கமர்ஷியல் பர்கர்ஸ், பீட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பிற சுவையான தின்பண்டங்களில் நிறைவுற்ற கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) உள்ளன. இவை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடாமல் கட்டுப்படுத்துவது நல்லது.
5/6

ரீஃபைண்ட் ஆயில், மார்கரைன் ஆயில் என்றெல்லாம் விற்கப்படும் எண்ணெய் ஜீரோ ஊட்டச்சத்து தன்மையுடையவை. இவற்றில் ட்ரான்ஸ் மற்றும் அன்சேச்சுரேடட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இவை இன்சுலின் அளவை மாற்றுவதோடு, லிபிட் ப்ரொஃபைலையும் மோசமாக்கும்.
6/6

நொறுக்குத் தீனி இது முன்பெல்லாம் குழந்தைகளின் விருப்பமாக மட்டுமே இருந்த நிலையில் சர்வதேச பிராண்ட்கள் பல வயதுக்கேற்ப டார்கெட் நுகர்வோர் வைத்து இது சர்க்கரை வியாதியாளர்களுக்கான டயட்டரி ஃபைபர்ஸ் கொண்டது,ரீஃபைண்ட் மாவு, சர்க்கரை, ரீஃபைண்ட் ஆயிலே பிரதான பொருட்கள். அதேபோல் ஐஸ்க்ரீமிலும் பதப்படுத்தப்பட்ட ரீஃபைண்ட் ஆயில் மற்றும் சர்க்கரை உள்ளது.
Published at : 05 Jul 2024 12:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement