மேலும் அறிய
Pasi Paruppu Halwa : பாசி பருப்பில் இப்படி அல்வா செய்து பாருங்க..சுவை அல்டிமேட்டா இருக்கும்!
Pasi Paruppu Halwa : வீட்டில் சாதாரண ஸ்வீட்ஸ் செய்து போர் அடித்துவிட்டதா ? அப்போ இந்த பாசி பருப்பு அல்வா செய்து பாருங்க செம்மையா இருக்கும்.

பாசி பருப்பு அல்வா
1/6

தேவையான பொருட்கள் : பாசி பருப்பு - 250 மி.லி, முந்திரி பருப்பு - 1/2 கப், பாதாம் நறுக்கியது, பிஸ்தா நறுக்கியது, திராட்சை, ரவா - 1 மேசைக்கரண்டி, கடலை மாவு - 1 மேசைக்கரண்டி, தண்ணீர் - 1 கப், பால் - 1 கப், சர்க்கரை - 2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி , குங்குமப்பூ, நெய்
2/6

செய்முறை : முதலில் பாசி பருப்பை தண்ணீரில் 3 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும். அதன் பிறகு வடிகட்டி காய வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
3/6

அடுத்தது அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பிஸ்தாவை அனைத்தையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
4/6

அடுத்தது மீண்டும் கடாயில் நெய் ஊற்றி சூடானதும் ரவா, கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அதன்பிறகு அரைத்து வைத்துள்ள பாசி பருப்பை சேர்க்கவும்.
5/6

பாசி பருப்பை சேர்த்து 15 நிமிடம் வறுக்கவும். அதன் பிறகு பால், நெய் மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிடவும். அடுத்தது சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை பாசி பருப்பில் முழுமையாக கரையும் வரை கிளறி விடவும். அதன் பிறகு மீண்டும் நெய் சேர்த்து கிளறவும்.
6/6

அல்வா கெட்டியானதும் ஏலக்காய் தூள், குங்குமப்பூ கிளறிவிட்டு, கடைசியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை இறக்கினால் சுவையான பாசி பருப்பு அல்வா தயார்.
Published at : 12 Jul 2024 11:15 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion