மேலும் அறிய
DhruvaNatchathiram Second Single: ஒரு வழியா வந்துவிட்டது துருவ நட்சத்திரம் அப்டேட்..வெளியாகிறது 2ஆவது சிங்கிள்!
DhruvaNatchathiram Second Single: நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

துருவநட்சத்திரம்
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு “துருவ நட்சத்திரம்” படம் தொடங்கப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு என எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க மறுத்தார்.இதனால் கதையில் சில மாற்றம் செய்யப்பட்டு விக்ரம் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
2/6

இதேபோல் “ஒரு மனம்” பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் அதன்பிறகு எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாகவில்லை.
3/6

ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் பல ஆண்டுகள் கழித்து தான் ரிலீசானது. இதனால் ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படமும் வெளியாகுமா இல்லையா என குழம்பி தவித்தனர்.
4/6

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படம் முடிவடைய உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் எனவும் இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை தொடங்கியதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
5/6

டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம் எனவும் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஹாரிஸ் ஜெயராஜ் - கௌதம் மேனன் கூட்டணியில் படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
6/6

இப்படியான நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் 2வது பாடல் "His Name is John" ஜூலை 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 16 Jul 2023 03:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement