மேலும் அறிய

நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வடம்' படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த்,  பால சரவணன், 'ஆடுகளம்'நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ராஜசேகர் பேசுகையில்

'' நான் இந்த துறைக்கு புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னை சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டை பற்றி சொன்னார். அது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாக சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையை சொன்னாரோ... அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்தார்கள். குறிப்பாக இமான் அவர்களின் இசை சிறப்பாக இருந்தது. புது தயாரிப்பு நிறுவனம் புது தயாரிப்பாளர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள் தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ -காபி -பால் -தயிர்- என மாட்டுடன் நாம் அனைவரும் தொடர்பு கொண்டிருக்கிறோம். 18 ஆண்டு காலம் நமக்காக வாழ்ந்து இறக்கிறது. இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டை பற்றி படம் எடுப்பது பாக்கியம் என கருதுகிறோம்.

நிறைய பேர் வெள்ளித்திரையில் தோன்றுவதை தான் தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த விசயத்தை நாங்கள் சொன்னதால் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக இறைவனுக்கும், மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்'' என்றார்.

நடிகர் முனீஸ்காந்த் பேசுகையில், '' வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் புது தயாரிப்பாளரை போல் இல்லாமல் எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவர் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். விமலுடன் தொடர்ந்து நான் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் இந்த படத்தில் நட்டியுடன் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.

பொதுவாக ஒரு காட்சியில் நடிக்கும் போது அந்த காட்சி நிறைவடைந்த பிறகு தான் சக நடிகர்கள் பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சிறப்பாக நடிக்கிறீர்கள் மேலும் மெருகேற்றுங்கள் என உற்சாகப்படுத்தினார் நட்டி. இது எனக்கு பெருமிதமாக இருந்தது அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பாண்டி முனி' என்ற பாடல் மிகப்பெரிய 'வைப்'பாக இருந்தது. இதற்காக டி. இமானுக்கு நன்றி.

நான் நடித்த கதாபாத்திரத்தை பற்றி இப்போது எதையும் பகிர்ந்து கொள்ள இயலாது. எனக்கு முக்கியமான கேரக்டரை இயக்குநர் கொடுத்திருக்கிறார். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சினிமாவில் நடிப்பதற்காக ஆசைப்பட்ட கேரக்டர் அதுதான். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். '' என்றார்.

இயக்குநர் கேந்திரன் பேசுகையில் : ''கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன் அப்போது அவர் நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா..! என்றார். நான் நிச்சயமாக எடுக்கிறேன் என்று சொன்னவுடன் அவரும், நானும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.

இப்படத்திற்காக நிறைய ஹீரோயின்களை தேடிக் கொண்டே இருந்தோம். ஒருமுறை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு போட்டோவை பார்த்தேன்.‌ அந்த போட்டோ அழகாக இருந்தது. வேறு எதையும் யோசிக்கவில்லை. அப்புறம் அவரை தேடினோம். அவர் என்னுடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை நடிக்க வைத்தோம். அவரும் அற்புதமாக படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நல்ல ஆர்டிஸ்ட் ஆக வருவார். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.‌ இந்தப் படத்தில் விமலுடன் நடித்த 'பாண்டி முனி' எனும் காளை மாட்டிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காட்சி படமாக்கும் போது 'ஆக்ஷன்' என்று சொன்னால் பாண்டி முனி நடிக்கும். நீங்கள் படம் பார்க்கும்போது அதனை ரசிப்பீர்கள்.

விமல் இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட பிறகு பணிகள் வேகம் எடுத்தன. இந்தப் படம் இவ்வளவு விரைவாக நிறைவடைந்து இருக்கிறது என்றால் அதற்கு ஹீரோவின் ஒத்துழைப்பு தான் முக்கியம். நான் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேசவில்லை. மார்ச் 6ஆம் தேதி திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்

நடிகை சனஸ்கா ஸ்ரீ பேசுகையில் :  '' நான் இயக்குநருடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியைத் தான் நான் என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.‌

புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி. பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விமலுடன் பணியாற்றும்போது அவர் என்னை கலாய்த்து கொண்டே இருப்பார்.

நான் சின்ன வயதில் ஸ்கூலுக்கு செல்லும் போது இமானின் பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். படத்தில் எனக்கும் ஒரு சோலோ சாங் இருக்கிறது. அதை கொடுத்த இமான் சாருக்கு நன்றி. ரொம்ப வருசத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு ஒரு சோலோ சாங் வருகிறது. அதில் நான் நடித்ததற்கு மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றி சொல்கிறேன். இந்தப் படத்தை நாங்கள் அனைவரும் இன்று காலையில் தான் பார்த்தோம். படம் மிக சிறப்பாக வேற லெவலில் இருக்கிறது. படத்தின் இடைவேளைக்கு முன்னரான சண்டைக்காட்சியில் நானும் இருக்கிறேன். இதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநருக்கு நன்றி'' என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில் : '' மாசாணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜசேகருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய முதல் படம் இது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். இந்த நிறுவனம் தொடர்ந்து பல பல வெற்றி படங்களை வழங்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 60, 70 முறை சந்தித்திருப்போம். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு நொறுக்குத் தீனியை எடுத்து வந்து அன்பை வெளிப்படுத்துவார். அதேபோல் படத்திற்கும் தேவையான அனைத்து விசயங்களுக்கும் கஞ்சத்தனம் இல்லாமல் செலவு செய்திருக்கிறார். இயக்குநருக்கு மிகப்பெரிய சொத்து தயாரிப்பாளர் ராஜசேகர் தான். அவர்கள் இருவரும் இணைபிரியாத தோழர்கள் போல இருப்பார்கள். அவர்களுடைய நட்பு இப்படத்தை கடந்தும் தொடரும் என நம்புகிறேன்.

இயக்குநர் இப்படத்தின் கதையை என்னிடம் முதலில் சொன்ன பிறகு நான் இசையமைக்கிறேன். ஆனால் அதற்கு முன் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னேன். அப்போதுதான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும். அதனால் முதலில் ஒரு நடிகரை பேசி தீர்மானித்து உறுதி செய்து விட்டு வாருங்கள் என சொன்னேன். விமல் சார் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. இன்றைக்கு இருக்கும் ஜென் ஸீ இளைஞர்களுக்கு இவருடைய 'ஒற்றை வார்த்தை ' மிகவும் பிடிக்கும். இது ஒரு நல்ல விசயம்தான்.  மனதில் தோன்றுவது தான் பேசுகிறார் என்பது வெளிப்பட்டு விடும். அப்படி ஒரு இயல்பான மனிதராக இருப்பதற்காக விமலை நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் பாடலாசிரியர் ஞானக்கரவேல் தான் எழுதி இருக்கிறார். சிறிது இடைவெளிக்குப் பிறகு நான் ஒரு பாடலுக்கு பின்னணி பாடி இருக்கிறேன்.  இந்த திரைப்படத்தின் பாடல்களை என்னுடைய டி ஐ சவுண்ட் ஃபேக்டரி நிறுவனத்திற்கு வழங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. நட்டி சார் நம் திரைத்துறையின் சொத்து. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் படம் நம்முடைய ரூரல் ஸ்போர்ட்ஸான வட மஞ்சு விரட்டு  பற்றிய படம். அது தொடர்பான காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஷபு. அவருக்கு என் வாழ்த்துக்கள். எந்த படமாக இருந்தாலும் லைட் அண்ட் சவுண்ட் தான் முக்கியம். ஒரு இயக்குநருடைய கற்பனையை கொடுப்பதே லைட் அண்ட் சவுண்ட் தான். அதில் லைட் என்ற விசயத்திற்கு காரணமான ஒளிப்பதிவாளருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இன்றைய சூழலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களின் எண்ணிக்கை குறைவு தான். இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆணாதிக்கம் மிக்க இந்த உலகத்தில் பெண்களுக்கு ஒரு முழு பாடலை வழங்குவது என்பது குறைந்துவிட்டது. அது எழுதும்போது இருந்தால்தான் திரையில் வரும். அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர் சொல்லும் போது தான் நாங்களும் அப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும். இதற்காக இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் இப்படி ஒரு சூழலை உருவாக்கினார்.   இந்த படம் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவர். அவர் வணங்கும் தெய்வம் அவருக்கு எல்லா அருளையும் வழங்க வேண்டும்.

என்னுடைய அனுபவத்தில் இறை மீது நேசம் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஒரு போதும் வீழ்ச்சி இல்லை. அதனால் இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தயாரிப்பாளருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.

 

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget