மேலும் அறிய
Vijay and Trisha Photos: கீர்த்தி கல்யாணத்தில் த்ரிஷாவுடன் கும்மாளம்! தனி விமானத்தில் சென்றபோது கொத்தாக சிக்கிய தளபதி!
ஏற்கனவே ஏகப்பட்ட கிசு கிசு தளபதியை சுற்றி கொண்டிருக்கும் நிலையில், இப்போது கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்கு த்ரிஷாவுடன் ஜோடியாக சென்று சிக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் த்ரிஷாவுடன் கலந்து கொண்ட விஜய்
1/5

நடிகை த்ரிஷா மற்றும் விஜய் குறித்த கிசு கிசு 'கில்லி' படத்தில் இருவரும் இணைந்து நடித்ததில் இருந்தே தமிழ் சினிமாவில் அவ்வப்போது புகைந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் இருவருமே இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை.
2/5

விஜய், பல வருடங்கள் த்ரிஷாவுடன் ஜோடி போடாமல் இருந்ததன் காரணம் கூட, விஜய் - த்ரிஷா இடையே இருக்கும் நட்பு எந்த விதத்திலும் தன்னுடைய வாழ்க்கைக்குள் பிரச்சனையாக வந்துவிட கூடாது என எண்ணி, விஜய்யின் மனைவி சங்கீதா தளபதிக்கு போட்ட கண்டீஷன் தான் என கூறப்பட்டது.
3/5

ஆனால் கடந்த 2 வருடமாக தளபதி - சங்கீதா இடையேயான திருமண உறவு சரியாக இல்லை என கூறப்படுகிறது. இது வதந்தி என கூறப்பட்டாலும், இந்த விவாகரத்து வதந்தி எழுந்ததில் இருந்தே சங்கீதா மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக வெளியிடங்களுக்கு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. சங்கீதா சென்னை மற்றும் லண்டன் என அடிக்கடி வந்து செல்வதற்கு கூட தளபதியின் மகன் சென்னையில் இருப்பது தான் காரணம் என கூறப்பட்டது.
4/5

இப்படி தளபதியின் வாழ்க்கையில் பல சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் தட்டி விட்டுவிட்டு அரசியல் வாழ்க்கையில் ஐக்கியம் ஆகி கடைசி படத்தையும் அறிவித்தார் விஜய். நேற்று நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொண்டார். கோவாவில் நடந்த இந்த திருமணத்திற்கு தளபதி தனியாக சென்றதாகவே கூறப்பட்டது.
5/5

ஆனால் அது தான் இல்லை. தளபதியுடன் த்ரிஷாவும் சென்றுள்ளார். விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்ற நிலையில் விமான நிலையத்தில் இருந்து இறங்கி காரில் போன போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 13 Dec 2024 11:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion