மேலும் அறிய

TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

Tamil Nadu Budget 2026: விஜய் அரசின் முதல் பட்ஜெட்: கல்விக்கு நிதி குறைப்பு! பள்ளிக் கல்வி, உயர் கல்விக்கு பெரும் பின்னடைவு?

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தவெக அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிக் கல்வித்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

கடந்த கல்வியாண்டில் 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2026-27ஆம் நிதியாண்டிற்கு 44,527 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு. கடந்த ஆண்டை விட 2,240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு சரிந்து உள்ளது.

50 ஆயிரம் கோடியைத் தாண்டாத பட்ஜெட்

இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 48,534 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 50000 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டைவிட, 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித்துறைக்கும் இடி

ஆண்டாண்டு காலமாகவே உயர் கல்வித் துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்பது பேராசிரியர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆய்வுத் துறையில் போதிய கவனம் செலுத்துவதற்கு நிதி இல்லை என்பது பெரிய குறைபாடாக உள்ளது.

கடந்த நிதியாண்டில் 8,494 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த 2026- 27ஆம் நிதியாண்டில் 8,393 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 101 கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் பட்ஜெட்டின் நிதி அதிகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய சூழலில், நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளின் திறன் குறையும் என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அன்பில் மகேஸ் கண்டனம்

இதுகுறித்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து” என உரக்கச் சொல்லும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், குறைவான நிதியே தற்போதைய அரசால் ஒதுக்கப்படுவது இன்று வெளியான நிதிநிலை அறிக்கை மூலம் தெரிய வருகிறது.

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்றென்றும் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம்’’ என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
Embed widget