TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
’மகளிருக்கு 2,500, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை 3 ஆயிரமாக உயர்த்தப்படும் என தவெக கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை’

இன்று முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது மகளிர் உள்ளிட்டோருக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, மாதம் தோறும் மகளிருக்கு வழங்கும் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய்க்கு பதில் 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் வருடத்திற்கு விலையில்லா ஆறு எரிவாயு சிலிண்டர் தரப்படும், வறுமையில் வாடும் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு மாத உதவித் தொகையாக 3 ஆயிரம், கர்ப்பிணிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் என்று பெண்களுக்காக சொன்ன முக்கிய வாக்குறுதிகளும் தவெக பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கும் ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது.
இளைஞர்களுக்கும் அல்வா கொடுத்த விஜய் பட்ஜெட்
அதே நேரத்தில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என்பதும் 12ஆம் வகுப்பு ஐடிஐ, டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்ற இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வாக்குறுதியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததால் அவர்களும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
வாக்குறுதி கொடுத்தும் இடம்பெறாத அறிவிப்புகள் என்னென்ன ?
தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்ட எந்தெந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என பார்க்கலாம்.
- வறுமையில் மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்திற்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆண்டுக்கு தலா இரண்டரை லட்சமாக உயர்த்தப்படும் என தவெக கூறியிருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை.
- ரேசன் கடைகளில் கலப்படம் முறைகேட்டை தவிர்க்க, அரிசி தவிர்த்த அனைத்துப் பொருட்களும் பாக்கெட்டுகளாக விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய பட்ஜெட்டில் கோதுமாவு மட்டும் பாக்கெட்டாக விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- முதியோர் உதவித் தொகை 3 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் இடம்பெறவில்லை
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை 3 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சொன்னதும் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை
- பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் நிறுவனம் வாங்கும் பாலுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடைபெறவில்லை.
இப்படி தவெக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளும் மண்டலம் வாரியாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















