Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Tamil Nadu Budget 2026-27 High lights: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
LIVE

Background
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதன்முறையாக தாங்கள் களமிறங்கிய தேர்தலிலே தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல் தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள முதலமைச்சர் விஜய் மீதும், அவரது ஆட்சி மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
முதல் பட்ஜெட்:
இந்த சூழலில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் இன்று தாக்கலானது. தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், தாலிக்கு தங்கம், மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாய், பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் கடன் சுமை பெரியளவில் உள்ள நிலையில், பல்வேறு வாக்குறுதிகளை தவெக அறிவித்துள்ள நிலையில் இன்று தவெக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலானது. நிதியமைச்சர் மரிய வில்சன் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கான பணிகளில் அவர் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக பணியாற்றி வந்தார்.
பெரும் எதிர்பார்ப்பு:
இன்று காலை சட்டசபையில் 10 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சர்ச்சைக்குரிய பேச்சின் காரணமாக கைது செய்யப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தில் அவரும் பங்கேற்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடகா மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் இணைந்து தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.
TN Budget 2026 LIVE: சூப்பர் எல் நினோ பாதிப்பை எதிர்கொள்ள ரூ.340 கோடி ஒதுக்கீடு
சூப்பர் எல் நினோவால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.340 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















