மேலும் அறிய
Trisha : குந்தவை ரோலுக்கு பாய் பாய்.. புது படத்திற்கு வேற கெட் அப் போட்ட த்ரிஷா!
தி ரோட் படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியாகி த்ரிஷா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

த்ரிஷா நடிக்கும் தி ரோட் படத்தின் பிடிஎஸ் காட்சிகள்
1/6

த்ரிஷா நடிக்கும் ’தி ரோட்’ திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் முதன்முறையாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
2/6

AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா மற்றும் ’சார்ப்பட்டா’ புகழ் டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ’தி ரோட்’.
3/6

நடிகை த்ரிஷாவின் திரைப்பயணத்தில் ’தி ரோட்’ திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமாக அமைந்துள்ளது.
4/6

மேலும் பொன்னியின் செல்வன் இருபாகங்களுக்குப் பிறகு 'தி ரோட்’ திரைப்படத்தை நடிகை த்ரிஷா பெரிதும் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
5/6

இத்திரைப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என படத்தின் இயக்குநர் அருண் வசீகரன் தெரிவித்துள்ளார்.
6/6

மேலும் இப்படத்திற்காக நடிகை த்ரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள் என மிகக் கடுமையான இடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு மேற்கொண்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது
Published at : 06 May 2023 12:40 PM (IST)
Tags :
Trishaமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement