மேலும் அறிய

 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா

என்னைப் பற்றியும் எனது கணவர் பற்றியும் தவறான வதந்தி பரப்பாதீங்க என்று பாடகி கல்பானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்னைப் பற்றியும் எனது கணவர் பற்றியும் தவறான வதந்தி பரப்பாதீங்க என்று பாடகி கல்பானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இதனிடையே கல்பனாவின் மகள் தனது தாய் தற்கொலை முயற்சி செய்யவில்லை எனவும் தினமும் எடுக்கும் மருந்தின் அளவு சற்று அதிகமாகிவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாடகி கல்பனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வணக்கம் நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னை பற்றியும் எனது கணவர் பற்றியும் மீடியாவுல ஒரு தவறான வதந்தி பரப்பிக்கொண்டு இருப்பதால் அதைப்பற்றி விளக்கம் கொடுக்கத்தான் இந்த வீடியோ வெளியிடுகிறேன்.

இந்த வயசுல நான் பிஎச்.டி, எல்.எல்.பி என நிறைய விஷயங்கள் படித்துக்கொண்டு இருக்கிறேன். மியூசிக்லையும் ரொம்ப தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றேன். இதில் ரொம்ப மன அழுத்தம் ஏற்பட்டதால் பல வருடங்களாக எனக்கு தூக்கம் சரியா இல்லை. இதன்காரணமாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அப்போது மருந்துகள் கொடுத்தனர். அதில் கொஞ்சம் டோஸ் அதிகமானதால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுயநினைவை இழக்கும் தருணத்திற்கு சென்றுவிட்டேன்.

இன்று நான் உயிரோடு திரும்ப வந்து உங்களிடம் பேசுகிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் என் கணவர் அன்று பட்ட பாடுதான். என்னை காப்பாற்ற அவர் பட்ட கஷ்டம் அவ்வளவு. அப்போது அவர் வெளியூரில் இருந்தார். என் கணவர்தான் போலீஸ், மீடியா, ஆம்புலன்ஸ் என எல்லாரையும் ஒருங்கிணைத்து என்னை சரியான நேரத்துக்கு மருத்துவமனையில் சேர்க்க உதவினார்.

அதனால் எந்த வதந்திகளையும் நம்பாதீங்க. என் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. கடவுளின் அனுகிரகத்தோடு என் வாழ்க்கையில் கிடைத்த அழகான விஷயம் பிரசாத் பிரபாகர் எனக்கு கணவராக கிடைத்தது. இவ்வளவு அன்பு இருக்குற தயா பிரசாத் என் மகளாக கிடைத்தது.

அதனால் தப்பான வதந்திகளை நம்பாதீங்க. இந்த நேரத்தில் போலீசாருக்கும் எனது ரசிகர்களும், என் உடன் வேலை  பார்ப்பவர்களுக்கும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு வேண்டிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அன்புக்கு நன்றி.

சீக்கிரமே உங்களை பாடல் மூலமாக சந்திக்கிறேன். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்னை நான் தயார்படுத்திக்கொண்டு இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

தலைப்பு செய்திகள்

டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
Embed widget