மேலும் அறிய
Tamil Cinema Updates : கோலிவுட் வட்டாரத்தில் பெய்து வரும் அப்டேட் மழை!
Tamil Cinema Updates : வழக்கத்திற்கு மாறாக இன்று தமிழ் சினிமாவிலிருந்து அப்டேட் மேல் அப்டேட் வந்து கொண்டு இருக்கிறது.

தமிழ் சினிமா அப்டேஸ்
1/7

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜாவை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியது. தற்போது படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
2/7

விஜய் ஆண்டனி, சரத் குமார், சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்த "மழை பிடிக்காத மனிதன்" படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
3/7

சூர்யாவின் 44 - வது படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை சூர்யா - கார்த்திக் சுப்பாராஜ் இணைந்து தயாரிக்க உள்ளனர்.இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் குறித்த தகவல்கள் வெளியாக உள்ளது.
4/7

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ராயன். இந்த படம் வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோவை தனுஷ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
5/7

நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் நடித்து முடித்த படம் அமரன். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அமரன் படம் வருகின்ற செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
6/7

மமிதா பைஜூ பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கவுள்ளார் என்று தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
7/7

நடிகர் சூரி நடித்துள்ள படம் கருடன், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள படம் ஹிட் லிஸ்ட். இந்த இரண்டு படங்களும் வருகின்ற மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Published at : 29 May 2024 01:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion