மேலும் அறிய
Allu Arjun Networth: அம்மாடி!! சிரஞ்சீவிக்கே டப் கொடுப்பார் போலயே - சொத்து மதிப்பில் மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!
புஷ்பா 2 பட நாயகனான அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு
1/6

தெலுங்கு திரையுலகின் ஐகான் ஸ்டாரான அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. டோலிவுட்டில் பல ஹிட்களைக் கொடுத்திருந்தாலும், புஷ்பா திரைப்படம் அவருக்கு பிளாக்பஸ்ட்ர் ஹிட்டைப் பெற்றுத் தந்தது. இந்த படத்தால் வெறும் தேசிய விருது மட்டுமல்ல, அல்லு அர்ஜுனுக்கு ஜாக்பாட்டும் சேர்ந்து அடித்தது என்றே கூற வேண்டும்.
2/6

புஷ்பா படத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பு அல்லு அர்ஜுனை ஐகான் ஸ்டாரில் இருந்து பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளது. இதனால் தனது சம்பளத்திலும் சில கோடிகளை தாரளமாக ஏற்றியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள புஷ்பா 2 படத்திற்கு 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் 460 கோடியாக உயர்ந்துள்ளது.
Published at : 21 Nov 2024 07:58 AM (IST)
மேலும் படிக்க





















