மேலும் அறிய
Iraivan Trailer : உடலை நடுங்க வைக்கும் சைக்கோ த்ரில்லர்..வெளியானது ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர்!
Iraivan Trailer : நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள ‘இறைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இறைவன் ட்ரெய்லர்
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள ஜெயம் ரவி நடிப்பில் கடந்தாண்டு அகிலன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியானது. இரு படங்களிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்த அவரின் நடிப்பு பாராட்டைப் பெற்ற நிலையில் நடப்பாண்டு பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகியிருந்தது. அதேசமயம் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன், ராஜேஷ் இயக்கும் படம், தனி ஒருவன் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
2/6

இதில் இறைவன் படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. அஹமத் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
3/6

மேலும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்தது.
4/6

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டதால் ஜெயம் ரவி ரசிகர்கள் சோகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி இறைவன் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5/6

இந்நிலையில் இப்படத்தில் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க செய்கின்றன.
6/6

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Published at : 03 Sep 2023 12:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion