மேலும் அறிய

பெண்ணே ஆகப்பெரும் சக்தி...த்ரிஷா போட்ட போடில் மன்னிப்பு கேட்டு ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்

இயக்குநர் பார்த்திபன் தன்னைப் பற்றி பேசிய கருத்திற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பார்த்திபன் நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்து பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.  முழுமையான அறிவில்லாமல் இந்த மாதிரி பண்படாத பேச்சுக்கள் பேசுபவரின் கேரக்டரையே வெளிப்படுத்துகின்றன என த்ரிஷா இந்த பதிவில் பார்த்திபனை கடுமையாக விமர்சித்துள்ளார் 

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் பார்த்திபனிடம் த்ரிஷா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பார்த்திபன் ' இந்த குந்தவையை கொஞ்ச காலம் வீட்டில் குந்தவைக்க சொல்லுங்கள். குந்தவை வீட்டில் குந்தவைத்தாலே இங்கு நிறைய பிரச்சனைகளை தடுக்கலாம். சில கவிதைகளை ரசிக்கலாம் ஆனால் அந்த கவிதையை சொல்லாமல் இருப்பது சில நேரங்களில் பெட்டர் ' என்று பார்த்திபன் கூறியிருந்தார். 

பார்த்திபன் பேச்சுக்கு  த்ரிஷா கண்டனம்

இதுகுறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " நிகழ்ச்சி ஒன்றில் என்னுடைய பெயரும் புகைப்படமும் பயண்படுத்தப்பட்டதாக அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர் சொல்லி தெரிந்துகொண்டேன். ஒரு தனிநபர் அவரது உதவியாளன் மூலமாக சொல்லி எனது கடைசி நேரத்தில் இதனை திட்டமிட்டு பேசியிருக்கிறார்கள். ஒரு மைக்ரோஃபோனால் நகைச்சுவையாகவோ அறிவுப்பூர்வமாகவோ எதுவும் பேசிவிடமுடியாது. ஏற்கனவே இருக்கும் முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக மட்டுமே அதில் பேசமுடியும் . இந்த மாதிரியான பண்படாத வார்த்தைகள் பேசப்படுபவரை விட பேசுபவரைப் பற்றி அதிகம் சொல்கின்றன' என்று பார்த்திபனின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

பார்த்திபன் மன்னிப்பு

சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறி விடுகின்றன. கலாட்டா விருது விழாவில் ரேபிட் ஃபயர் ரவுண்டில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போத் த்ரிஷாவின் ஃபோட்டோ வந்ததும் என்ன பேசவேண்டும் என்று யோசிக்கையில் எல்லாரும் குந்தவை குந்தவை என்று கத்த தொடங்கினார்கள். இதனால் நகைச்சுவையாக குந்தவையை வீட்டிலேயே குந்தவைக்க சொல்லுங்கள் என்று விளையாட்டாக சொல்ல அரங்கமே கைதட்டியது. நான் மேடையில் பேசி முடிந்த பின் கீழே இருந்த ரங்கராஜ் பாண்டே குந்தவையை தவிர்த்திருக்கலாம். நான் பேசியதை வெளியிட வேண்டாம் என்று கலாட்டா நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் யாரோ எடுத்த வீடியோ மூலம் அது வெளியாகி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்து அதற்காக நானும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிரச்சனைகளை பெரிதாக நான் விரும்பவில்லை. நான் கல்லூரிகளில் பேச செல்லும் போது பெண் விடுதலையை முக்கியமாக பேசுகிறேன். ஆண் பெண் பாகுபாடுகளை ஏதுமின்றி  அனைவரும் தேவையற்ற கட்டுபாடுகளை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திரத்தை கைபிடித்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆதரிப்பவன் நான். பெண்ணே இந்த பிரபஞ்சத்தில் ஆகப்பெரும் சக்தி" என்று பார்த்திபன் ஆடியோ வெளியிட்டுள்ளார். 

விஜய் விவாகரத்து சக்தி

தவெக தலைவர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். விஜய்க்கு பிரபல நடிகை ஒருவருடம் திருமணம் கடந்த உறவு இருப்பதே இந்த விவாகரத்திற்காக முக்கியமான காரணமாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தவெக ஆதரவாளர்களில் சிலர் விஜய் பக்கமும் சிலர் சங்கீதா பக்கம் என இரு தரப்பாக பிரிந்துள்ளார்கள். மேலும் நடிகை த்ரிஷா மீதும் சமூக வலைதளங்களில் சங்கீதா ஆதரவாளர்கள் விமர்சனங்களை வைத்து வருகிறார். 

தலைப்பு செய்திகள்

டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
Embed widget