மேலும் அறிய

T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!

T20 WC Final IND vs NZ: அகமதாபாத்தில் இன்று நடக்கும் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது.

T20 WC Final IND vs NZ: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் சாம்பியன் யார்? என்பதைத் தீர்மானிப்பதற்காக களமிறங்கியுள்ளன. 

இந்தியா முதலில் பேட்டிங்:

இந்த போட்டியைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் டாஸ் வென்றார். இதையடுத்து, அவர் சேசிங்கைத் தேர்வு செய்தார்.  இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

முதலில் பேட் செய்யும் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இமாலய இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே நியூசிலாந்து அணியை நெருக்கடியில் ஆளாக்கி இந்திய அணி வெற்றி பெற முடியும். 

அணி விவரம்:

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அபிஷேக் சர்மா, சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

நியூசிலாந்து அணியில் சான்ட்னர் தலைமையில் டிம் செய்ஃபெர்ட், ஃபின் ஆலன், ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், சாப்மன், மிட்செல், நீஷம், மேட் ஹென்றி, பெர்குசன், ஜேக்கப் டஃபி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இந்திய அணி அரையிறுதியில் மோதிய அதே அணியுடன் களமிறங்கியுள்ள நிலையில், நியூசிலாந்து அணி மெக்கன்சிக்கு பதிலாக டஃபியை களமிறக்கியுள்ளது. 

பேட்டிங் பலம்:

முதலில் பேட் செய்யும் இந்திய அணி அரையிறுதியில் காட்டியது போல அதிரடியையே காட்ட விரும்பும் என்று கருதப்படுகிறது. இந்த தொடரில் பெரியளவு சோபிக்காத இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும். சாம்சன் தனது அதிரடியைத் தொடர்ந்தால் இந்திய அணி அரையிறுதியில் போல மிகப்பெரிய ரன்களை குவிக்கலாம். 

இந்த தொடரில் அசத்தலாக ஆடி வரும் இஷான் கிஷன் இன்றும் தனது அதிரடியைக் காட்டினால் இந்தியாவிற்கு பக்கபலமாகும். திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். 

நியூசிலாந்து அணியிலும் கடந்த அரையிறுதியில் கலக்கிய டிம் செய்ஃபெர்ட், பின் ஆலன் அதிரடி காட்டினால் இந்தியாவிற்கு நெருக்கடியாகும். ரவீந்திரா, பிலிப்ஸ் சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும். மிடில் ஆர்டரில் மிட்செல் பக்கபலமாக உள்ளார். 

ஆல்ரவுண்டர்:

இந்திய அணியில் ஆல்ரவுண்டராக பாண்ட்யாவும், அக்ஷர் படேலும் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு ஆல்ரவுண்டரில் பலமாக கேப்டன் சான்ட்னெர், நீஷம் உள்ளனர். இரு அணியிலும் ஆல்ரவுண்டர்கள் பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

பந்துவீச்சு:

வெற்றியைத் தீர்மானிப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் பந்துவீச்சு இரு அணியிலும் வலுவாக உள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சு அஸ்திரமாக பும்ரா உள்ளார். அவருடன் அர்ஷ்தீப்சிங் உள்ளார். நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபி, பெர்குசன் உள்ளனர். மேட் ஹென்றி சிறப்பாக பந்துவீசினால் இந்தியா நெருக்கடிக்கு ஆளாகும். 

இந்திய அணியில் சுழலில் வருண் சக்கரவர்த்தி இன்று கம்பேக் தருவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த அணியில் ரவீந்திரா கூடுதல் சுழல்பந்துவீச்சாளராக உள்ளார். இன்றைய போட்டியில் இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போட்டிபோடும் என்பதால் இந்த போட்டி மிகுந்த சவாலனதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget