மேலும் அறிய

Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?

Jananayagan Release: ஜனநாயகன் படத்துக்கு அடுத்த வாரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படம் மார்ச்19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

விஜயின் கடைசி திரைப்படம்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது சினிமா கேரியரில் கடைசியாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

சென்சாரில் சிக்கல்:

இந்த நிலையில் ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் பிரச்னையில் சிக்கியது. இந்த படத்தை முதலில் சென்சார் போர்டுக்கு அனுப்பிய நிலையில் படம் பார்த்த அதிகாரிகள் மாற்றங்களை தெரிவிக்க, அதனை சரி செய்து மீண்டும் படக்குழு சான்றிதழ் கேட்டு அணுகிறது. ஆனால் அது தரப்படாமல் இழுத்தடிக்கப்படவே, பட நிறுவனம் ரிலீசுக்கு 4 நாட்கள் முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. 

வழக்கு விசாரணை

அதில் சென்சார் போர்டு அதிகாரி ஒருவர் படத்தில் மதத்தை புண்படுத்தும்படி காட்சி இருப்பதாக புகார் அளித்ததால் சென்சார் சான்றிதழ் அளிக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் தணிக்கைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் அளிக்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தணிக்கைத்துறை மேல்முறையீடு செய்தது. பட நிறுவனம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. ஆனால் கேவிஎன் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் சென்சார் போர்டு சொன்ன மாற்றங்களை செய்து சமீபத்தில் மீண்டும் தணிக்கை சான்றிதழ் கேட்டு படக்குழு அனுப்பியுள்ளது. அதேசமயம் நீதிமன்றத்தில் வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. 

அடுத்த வாரம் சென்சார்?

இதனிடையே ஜனநாயகன் படத்துக்கான உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு விநியோகம் பாதிக்கப்பட்டதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கேவிஎன் நிறுவனம் தெரிவித்தது. தியேட்டர்களிலும் பல கோடிக்கு டிக்கெட் முன்பதிவும் நடைபெற்ற நிலையில் பணம் அனைத்தும் ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. இதனிடையே ஜனநாயகன் படத்துக்கு அடுத்த வாரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் சென்சர் சான்றிதழ் மார்ச் 15ஆம் தேதிக்குள் படக்குழுவிற்கு கிடைத்துவிட்டால், மார்ச்19ஆம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் விதிகளின்படி தேர்தலில் போட்டியிடுபவர்கள் சம்பந்தப்பட்ட விதிகளில் திரைப்படம் மூலம் பரப்புரை செய்யக்கூடாது என்பதும் உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே சென்சார் சான்றிதழ் கிடைத்தும் படம் வெளியாகாத சூழல் உருவாக வாய்ப்பும் உள்ளது, ஒரு வேளை இப்படி நடந்தால் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ரிலீஸ் செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை.. வி.எஸ்.பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை.. வி.எஸ்.பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Embed widget