மேலும் அறிய

IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...

IND vs NZ T20 World Cup 2026 Final: டி20 உலகக்கோப்பையில் இன்று நியூசிலாந்து அணியுடன் நடைபெறும் இறுதிப்போட்டியில் வெல்வதன் மூலம், 2 முக்கிய சாதனைகளை படைக்க இந்திய அணிக்கு வாய்ப்புகள் உள்ளன.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று  நடைபெறும் இறுதிப் போட்டியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வென்றால், 2 முக்கிய சாதனையை இந்திய அணி படைக்கும். அவை என்னென்ன என்பது குறித்து, வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பது குறித்தும் இப்போது பார்க்கலாம்.

அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டி

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026-ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. லீக் போட்டிகள் முடிந்து சூப்பர் 8  சுற்றுக்கள் மற்றும், அதைத் தொடர்ந்து விறுவிறுப்பான அரையிறுதி போட்டிகள் நடைபெற்ற நிலையில், நடப்பு சாம்பியன் இந்தியாவும், பலமான நியூசிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இந்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய நிலையில், நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து, முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் களம் காண்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்த  பிரமாண்ட இறுதிப்போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. சுமார் 1.30 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, சரியாக 7:00 மணிக்கு போட்டி தொடங்கும்.  இந்த போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய நிறைவு விழா நடைபெகிறது.

பிட்ச் மற்றும் வானிலை எப்படி.?

பிட்ச்-ஐ பொறுத்தவரை, அகமதாபாத் மைதானத்தின் ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. அங்கு சிவப்பு மற்றும் கருப்பு மண் கலந்த ஆடுகளம் பயன்படுத்தப்படுவதால், ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கும் அதே நேரத்தில், ஆட்டம் போகப் போக பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு எளிதாக இருக்கும்.

இரவு நேரத்தில் பனி (Dew Factor) இருக்க வாய்ப்பு உள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

வானிலையை பொறுத்தவரை, இன்றைய தினத்திற்கான அறிக்கையின்படி, மழை குறுக்கிட வாய்ப்பு இல்லை என்பதால், ரசிகர்கள் எந்த பயமுமின்றி முழுமையான ஆட்டத்தை  ரசிக்கலாம்.

வாய்ப்பு யாருக்கு.?

டி20 ஃபார்மெட்டில் சர்வதேச அளவில் இந்திய அணி முதன்மையான அணியாக, பெரும் பலத்துடன் உள்ளது. இந்திய அணியில், இன்-ஃபார்ம் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், அதிரடி காட்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், இறுதி கட்டத்தில் இடியாய் இடிக்க திலக் வர்மா, ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, ஆல்-ரவுண்ட் பெர்ஃபார்மென்சுக்கு அக்சர் படேல் என இந்திய அணி பேட்டிங்கில் வலுவான லைன்-அப்பை கொண்டுள்ளது. அதுபோக, பந்துவீச்சில் ஏற்கனவே பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி மிரட்டி வருகின்றனர். இதனால், கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியே ஃபேவரைட்டாக உள்ளது.

மறுபுறம், நியூசிலாந்துக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுக்க, பின் ஆலன், ரச்சின் ரவீந்திரா உள்ளனர்.  இதில், அரையிறுதியில் 33 பந்துகளில் சதம் விளாசி, அசுர ஃபார்மில் உள்ளார் ஆலன். அவர்களைத் தொடர்ந்து அதிரடி காட்ட டிம் செய்ஃபர்ட்டும் உள்ளார். இவர்களது பேட்டிங் வரிசையும் பலமாக உள்ளது. பந்துவீச்சாளர்களில், பெர்குசன், மேட் ஹென்றி, ஜிம்மி நீஷமும், சுழலுக்கு கேப்டன் சான்ட்னர், ரச்சின், மெக்கோன்ஸி ஆகியோரும் உள்ளனர்.

இந்த பலத்துடன், உலகக் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீவிர தாகம் நியூசிலாந்து அணியிடம் உள்ளது. அதனால், இந்த போட்டி நிச்சயம் மிக மிகக் கடினமானதாகவே இருக்கும். ரசிகர்களுக்கு விறுவிறுப்பு குறையாமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சர்வதேச டி20 அரங்கில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இதுவரை 30 முறை மொதியுள்ளன. அதில், 18 முறை இந்தியாவும், 11 முறை நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘டை‘-யில் முடிந்துள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்த இரு அணிகளும் முதன் முறையாக மோதுவதும் குறிப்பிடத்தக்கது.

2 மாபெரும் சாதனைகளை படைக்க இந்திய அணிக்கு வாய்ப்பு

இந்த 2026 டி20 உலகக் கோப்பையை வென்றால், இந்திய அணி 2 மாபெரும் சாதனைகளை படைக்க வாய்ப்புகள் உள்ளன. அதாவது, டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நாடு இதுவரை கோப்பையை வென்றதில்லை என்ற நிலை உள்ளது. இந்த முறை இந்தியா வென்றால், போட்டியை நடத்தும் நாடே கோப்பையை வென்ற சாதனை நிகழ்த்தப்படும்.

அடுத்தது, இதுவரை டி20 உலகக் கோப்பையை எந்த ஒரு அணியும் மூன்று முறை வென்றதில்லை. ஏற்கனவே இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்று, நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி, இந்த வருட கோப்பையை வெல்வதன் மூலம், மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் படைக்கும்.

சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! பொறுத்திருந்து பார்ப்போம்...

 

 

 

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget